சாத்துக்குடி சாகுபடியில் சாதிக்கும் சக்திவேல்

சாத்துக்குடி தோட்டத்தில் சக்திவேல்.

சாத்துக்குடி தோட்டத்தில் சக்திவேல்.

Updated on: 
2 min read

ஊத்தங்கரை அருகே ரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உடலுக்குச் சக்தி தரும் ‘கிரீன் கோல்டு’ நாட்டுச் சாத்துக்குடி சாகுபடியில் விவசாயி சக்திவேல் தொடர்ந்து அசத்தி வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மா, தென்னை, வாழை, நெல் சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் (55), புதிய முயற்சியாகச் சாத்துக்குடி சாகுபடியில் ஈடுபட்டு, தரமான பழங்களை விற்பனை செய்து வருகிறார்.

இதுதொடர்பாக விவசாயி சக்திவேல் கூறியதாவது: “நான் பயிரிட்டுள்ள சாத்துக்குடி ஆதிகாலத்து நாட்டு ரகமாகும். இதற்கு ‘கிரீன் கோல்டு’ என்கிற பெயரும் உண்டு. முன்னோர்கள் காலத்தில் முக்கியப் பழமாக இருந்த இந்த நாட்டுச் சாத்துக்குடியில் அதிக மருத்துவக் குணங்களும் நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்துள்ளன.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது ஓர் ஏக்கர் நிலத்தில் 250 கன்றுகள் நடவு செய்தேன். ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல், 100 சதவீதம் இயற்கை சாகுபடி முறையையே பின்பற்றி வருகிறோம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in