

ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளியில் செய்யப்பட்டுள்ள டிராகன் சாகுபடி. (உள்படம்: கோபி)
ஒரு காலத்தில் டிராகன் பழத்தை நம்மில் பலர் பார்த்திருக்க மாட்டார்கள். கடைகளிலும் அரிதாகவே கிடைத்து வந்தது. அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் பழம், சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும். இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடிபோன்ற தாவரம்.
இந்தப் பழத்தின் செதில்கள் பச்சை நிறமாக இருக்கும். இதன் நடுவில், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்திலான இனிப்புக் கூழ், சிறு கருப்பு விதைகளுடன் இருக்கும். சராசரியாக 700 முதல் 800 கிராம் எடை கொண்ட டிராகன் பழம், உலகில் வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
டிராகன் பழம் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையது என்பதால், கரோனாவுக்குப் பிறகு இந்த பழத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் வெளிநாடுகளில் மட்டும் விளைந்த இந்த பழம், இப்போது இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளியைச் சேர்ந்த கோபி (38) என்பவர் மானாவாரி பயிர்களை பயிரிட்டு வந்தார். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அவரது நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தார். அதில் குறைந்த தண்ணீரே கிடைத்தது.