முயல் வளர்ப்பு: சிறிய இடம்... பெரிய லாபம்!

சேலம் அழகாபுரம் அருகேயுள்ள தனது முயல் பண்ணையில் வெங்கடேஷ். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம் அழகாபுரம் அருகேயுள்ள தனது முயல் பண்ணையில் வெங்கடேஷ். படம்: எஸ்.குரு பிரசாத்

Updated on: 
2 min read

வீட்டில் இருக்கும் சிறிய அறை, மொட்டை மாடி, புறக்கடை காலி இடம் இருந்தால் போதும்; அங்கு கூண்டு அமைத்து முயல்களை வளர்ப்பதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையைச் சேலம் அழகாபுரம் படையப்பா நகரைச் சேர்ந்த ‘யாயா ரேபிட் பார்ம்’ உரிமையாளர் வெங்கடேஷ் ஏற்படுத்தியுள்ளார்.

முயல் வளர்ப்புத் தொழில் குறித்துத் தன்னுடைய அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்: “ஐ.டி. துறையில் ஆண்டுக்குப் பல லட்சம் ரூபாய் ஊதியம் வாங்கியவர்கள்கூட, வேலையை உதறித் தள்ளிவிட்டு விவசாயத்தின் பக்கமும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடுகிறார்கள். நிலையான வருமானமும், பதற்றமற்ற நிம்மதியான வாழ்க்கையும் வேண்டும் என்ற தேடலே இதற்கு முக்கிய காரணம்.

வீட்டில் உள்ள பெண்கள், வேலை தேடும் இளைஞர்கள், கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புவோருக்கு ஏற்ற தொழில் முயல் வளர்ப்பு. ஆர்வமும் உழைக்கும் எண்ணமும் இருந்தால் குறைந்த முதலீட்டிலேயே நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்பது எனது அனுபவப் பாடம். முயல் வளர்க்க விரும்புவோர் தொடக்கத்தில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை முதலீடு செய்ய வேண்டும். முதலில் 10 அடிக்கு 10 அடி என்ற அளவில் இடவசதி இருந்தால் போதுமானது. அந்த இடத்தில் சிறிய அளவிலான கூண்டு அமைத்து, இரண்டு பெண் முயல்கள், ஒரு ஆண் முயலை வளர்க்கத் தொடங்கலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in