புதுவை மண்ணில் ஒரு முன்மாதிரிப் பண்ணை: நஷ்டத்தில் இருந்து லாபத்துக்கு வழிவகுத்த இயற்கை விவசாயம்

உள்படம்: முருகன்

உள்படம்: முருகன்

Updated on
2 min read

செயற்கை உரங்களின் வரவால் நிலமும் நலிவடைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரமும் சுருங்கி வரும் இன்றைய சூழலில், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு விவசாயி ஒட்டுமொத்த வேளாண் உலகுக்கும் நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறார்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி முருகன்தான் அந்த சாதனையாளர். மணற்பாங்கான சூழலிலும், விடாமுயற்சியையும் இயற்கை வேளாண்மையையும் துணையாகக் கொண்டு, அவர் உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த இயற்கைப் பண்ணை இன்று பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது.

நஷ்டம் தந்த பாடம்

ஆரம்பத்தில் மற்ற விவசாயிகளைப் போலவே முருகனும் ரசாயன உரங்களை நம்பியே விவசாயம் செய்து வந்தார். ஆனால், நாளுக்கு நாள் அதிகரித்த இடுபொருள் செலவும், அதன் விளைவாக ஏற்பட்ட பெரும் நஷ்டமும் அவரைச் சிந்திக்க வைத்தன.

இந்தத் தோல்வியே, அவரைப் பல்லாண்டு காலக் கனவான இயற்கை விவசாயத்தை நோக்கித் திசைதிருப்பியது. வெறும் ஆசையோடு நின்றுவிடாமல், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பல்வேறு இயற்கை பண்ணைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அதுமட்டுமின்றி, சமூக ஊடகங்களான யூடியூப், ஃபேஸ்புக் மூலமும், வேளாண் விஞ்ஞானிகளிடம் ஆலோசனைகள் பெற்றும் இயற்கை விவசாயத்தின் நுணுக்கங்களை ஆழமாகக் கற்றுக்கொண்டார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in