மண் வளம் காக்கும் இயற்கை விவசாயம்: 60 ஏக்கரில் அசத்தும் திருப்பூர் விவசாயி

தோட்டத்துக்கு வருகை தந்த மாணவர்கள்.

தோட்டத்துக்கு வருகை தந்த மாணவர்கள்.

Updated on
2 min read

இன்​றைய நவீன கால​கட்​டத்​தில் மனித குலத்​தைப் அச்​சுறுத்​தும் பெரும்​பாலான நோய்​களுக்​கு, ரசாயனம் கலந்த காய்​கறிகளே முதன்​மை​யான காரணி​யாக அமை​கின்​றன. சந்​தை​யில் கிடைக்​கும் பெரும்​பாலான உணவுப்​பொருட்​கள் செயற்கை உரங்​களால் விளைவிக்​கப்​படு​பவை.

இந்​தச் சூழலில், நஞ்​சில்​லாத உணவை மக்​களுக்கு வழங்​க​வும், சீரழிந்து வரும் மண் வளத்​தைக் காக்​க​வும் இயற்கை விவ​சா​யம் மட்​டுமே ஒரே தீர்வு என்​ப​தைத் தனது பண்ணை மூலம் நிரூபித்​துக் காட்டி வரு​கிறார் திருப்​பூர் மாவட்​டம் இடு​வாய் கிராமத்​தைச் சேர்ந்த விவ​சாயி பி. முத்​துக்​கு​மார்.

பசுமைப் புரட்சி

திருப்​பூர் - சின்​னக்​காளி​பாளை​யம் சாலை​யில் அமைந்​துள்ள ‘குறிச்சி இயற்கை பண்​ணை’ கடந்த நான்கு ஆண்​டு​களாக இயற்கை விவ​சா​யத்​தின் முகவரி​யாகச் செயல்​பட்டு வரு​கிறது.

இங்கு ரசாயன உரங்​களுக்​குப் பதிலாக மக்​கிய உரம், மாட்​டுச் சாணம், மாட்​டுக் கோமி​யம், ஆட்​டுப் புழுக்​கை, மீன்கழி​வு, நாட்​டுச் சர்க்​கரை மற்​றும் பஞ்​சகவ்யா ஆகிய இயற்கை மூலப்​பொருட்​களைக் கொண்டே உரங்​கள் தயாரித்​துப் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

60 ஏக்​கர் பரப்​பள​வில் தென்​னை, வாழை, காய்​கறிகள், பழங்​கள், தேனீ வளர்ப்பு மற்​றும் நாட்​டுக்​கோழி வளர்ப்பு என ஒருங்​கிணைந்த முறை​யில் பண்ணை பராமரிக்​கப்​பட்டு வரு​கிறது. மேலும், 1,000 தென்னை மரங்​களு​டன் தலா 15,000 மலை​வேம்பு மற்​றும் சந்தன மரங்​களும் வளர்க்​கப்​படு​கின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in