

வேளாண்மை பட்டதாரியான நான், வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன். ரசாயன உரங்கள் விவசாயத்தை அழிக்கும் என்பதையும், விவசாயிகளை கடனாளியாக்கும் என்பதையும் புரிந்துகொண்டு, அங்கிருந்து வெளியேறினேன்.
அதற்குப் பிறகும் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் பத்தாண்டுகளில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதில் தீவிரமாக இருந்தேன். எனினும் விவசாயிகளெல்லாம் கடனாளியாகிக் கொண்டேயிருந்தார்கள். மறுபுறம் உரம் விற்பனை செய்த வியாபாரிகள் மேலும் மேலும் பணக்காரர் ஆனார்கள்.