இயற்கை முறையில் கொய்யா சாகுபடி: வழிகாட்டியாகத் திகழும் புதுக்கோட்டை பெண் விவசாயி | இயற்கை விவசாயத்தை நம்புவோம்

இயற்கை முறையில் கொய்யா சாகுபடி: வழிகாட்டியாகத் திகழும் புதுக்கோட்டை பெண் விவசாயி | இயற்கை விவசாயத்தை நம்புவோம்
Updated on
2 min read

நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களில், இயற்கை முறையில் பராமரிப்பதற்கு எளிமையாகவும், அதிக லாபமும் தருவதாகக் கொய்யா சாகுபடி விளங்குகிறது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த லில்லி அம்புரோஸ், இயற்கை விவசாய முறையில் கொய்யா சாகுபடி செய்யும் விவசாயி ஆவார். இவர் அரை ஏக்கர் நிலத்தில் தைவான் பிங்க் மற்றும் லக்னோ 49 ரகங்களைச் சேர்ந்த கொய்யா மரங்களை கடந்த ஆறு ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகிறார்.

இவர் சாகுபடி செய்துள்ள நிலத்தில் ஆறு வருடங்களுக்கு முன்பு யூக்கலிப்டஸ் மரங்கள் இருந்தன. அந்த மரங்களை அகற்றிவிட்டு, அதன் பின்னர் மண்ணின் வளத்தை மேம்படுத்தி கொய்யா சாகுபடி செய்து வருகிறார்.

மீட்கப்பட்ட மண் வளம்

எனது ஆலோசனையின் அடிப்படையில், இவர் முதலில் தனது நிலத்தின் மண் மற்றும் நீரைப் பரிசோதனை செய்து பார்த்தார். அதில், நிலம் அதிக அமிலத்தன்மையுடன் (pH 5.6) இருப்பது தெரிய வந்தது.

தண்ணீரின் தரமும் பாசனத்துக்கு ஏற்றதாக இல்லை. இந்தச் சூழலில், ‘நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்’ என்ற என்னுடைய டெலிகிராம் குழுவில் தெரிவித்த பல்வேறு வழிமுறைகளைக் கேட்டு, தனது நிலத்தில் முறையாக செயல்படுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் செய்த பல்வேறு மண்வளப் பாதுகாப்புப் பணிகள் மூலம் அவரது நிலத்தின் மண் சிறிது சிறிதாக வளமாக்கப்பட்டது. மண் வரப்புகள் அமைத்து, முறையான மக்கிய தொழுஉரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்களை வளர்த்து, மண்ணோடு மடக்கி உழுது நிலம் மேம்படுத்தப்பட்டது. அதன் பின்னர், கொய்யா நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

மகசூலை உயர்த்திய இயற்கை ஊக்கிகள்

மண்ணின் தன்மையை ஆராயவும், வளத்தை அதிகரிக்கவும் தொடர்ச்சியாக நிலக்கடலை பயிரிடப்பட்டு, அதில் படிப்படியாக விளைச்சலும் அதிகரித்தது. வளம் குறைந்த இந்த மண்ணின் தரத்தையும் வேர் வளர்ச்சியையும் கூட்ட மீன் அமிலம், உயிர் உரங்கள், ஹியூமிக் அமிலம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in