பல பயிர் சாகுபடியால் பலன்கள் அதிகம்

பல பயிர் சாகுபடியால் பலன்கள் அதிகம்
Updated on
2 min read

விவசாயத்தில் ஒற்றைப்பயிர் முறை என்பது ஒரே நிலத்தில் ஒரே வகையான பயிரை மட்டும் பயிரிடும் போக்கைக் குறிக்கிறது. இம்முறை பயிரைத் தின்னும் பூச்சிகளுக்கு மிக எளிதான இலக்காக நிலத்தை மாற்றிவிடுகிறது.

அதே நேரத்தில், நிலத்துக்கு நன்மை செய்யும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான பன்முகத்தன்மை கொண்ட சூழல் அங்கு இருப்பதில்லை. இதற்கு நேர்மாறாக, பல பயிர் சாகுபடி முறை ஒரு நுட்பமான மற்றும் சிக்கலான உயிரியல் கட்டமைப்பை உருவாக்குகிறது.

வெவ்வேறு உயரங்கள், மாறுபட்ட இலை அமைப்புகள் மற்றும் வெவ்வேறு காலங்களில் பூக்கும் தன்மையுடைய பல பயிர் இனங்கள் ஒரே இடத்தில் வளர்க்கப்படும்போது, அவை நன்மை செய்யும் உயிரினங்களுக்கு மிகச்சிறந்த புகலிடமாக அமைகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in