குறைந்த நீரில் நிறைந்த சாகுபடி: நீலகிரி விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் நுண்ணீர் பாசனம்

குறைந்த நீரில் நிறைந்த சாகுபடி: நீலகிரி விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் நுண்ணீர் பாசனம்
Updated on
2 min read

பருவநிலை மாற்ற சவால்களுக்கு மத்தியிலும், தண்ணீரை மிகச்சிறந்த முறையில் சேமித்து அதிக பரப்பளவில் சாகுபடி செய்யும் நோக்கில், நீலகிரி மாவட்ட மலைக்காய்கறி விவசாயிகள் மத்தியில் நுண்ணீர் பாசன முறை அண்மைக்காலமாக அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

நீலகிரி மாவட்​டத்தின் பிரதான வாழ்வா​தாரமாக தேயிலை மற்றும் மலைக்​காய்கறி விவசாயம் விளங்கி வருகிறது. வழக்கமாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் மூலம் ஆண்டின் ஆறு மாதங்​களுக்கு இங்கு தடையின்றி மழைப்​பொழிவு கிடைக்​கும். ஆனால், அண்மைக்கால புவி வெப்பமய​மாதல் மற்றும் தீவிர பருவநிலை மாற்றம் காரணமாக, பருவமழை போதிய நேரத்தில் பெய்வ​தில்லை.

சில நேரங்​களில் அதீத மழையும், சில சமயங்​களில் கடுமையான வறட்சியும் நிலவு​கிறது. இத்தகைய சூழலில், நீர் ஆதாரங்கள் உள்ள பகுதி​களில் இருந்து மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் எடுத்து விளைநிலங்​களுக்குப் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் விவசா​யிகளுக்கு ஏற்படு​கிறது.

பாரம்பரிய தெளிப்​பான்கள் மூலம் தண்ணீர் பாய்ச்​சும்​போது, சரிவுப் பாங்கான நிலங்​களில் நீர் நிலத்​துக்குள் இறங்காமல், தாழ்வான பகுதிகளை நோக்கி ஓடி வீணாகிறது.

விவசா​யிகளின் வரப்பிர​சாதம்

தற்போதைய காலகட்​டத்தில் குறைந்த தண்ணீரைத் திறம்படப் பயன்படுத்தும் தொழில்​நுட்​பங்கள் அவசிய​மாகின்றன. அந்த வகையில், தோட்டக்​கலைத் துறை அறிமுகப்​படுத்​தி​யுள்ள நுண்ணீர் பாசனத் திட்டம் விவசா​யிகளுக்கு ஒரு வரப்பிர​சாதமாக அமைந்துள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in