பப்பாளி சாகுபடியில் அசத்தும் எம்.இ. பட்டதாரி!

பப்பாளித் தோட்டத்தில் விவசாயி கோபிநாத்

பப்பாளித் தோட்டத்தில் விவசாயி கோபிநாத்

Updated on: 
2 min read

இயந்திரப் பொறியியலில் பட்ட மேற்படிப்பு (M.E.) முடித்து, நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் உயர்பதவியில் பணியாற்றியவர் விருதுநகரைச் சேர்ந்த கோபிநாத் (46).

நகரத்தின் இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற வேட்கையோடு தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

தற்போது விருதுநகர் அருகே உள்ள மீசலூர் சாலையில், தனக்குச் சொந்தமான தோட்டத்தில் குட்டை ரக ‘ரெட் லேடி’ பப்பாளி சாகுபடி செய்து இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார்.

தனது இந்த மாற்றுப் பாதை குறித்துப் பேசும் கோபிநாத், டெல்லியில் பணியாற்றி வந்த காலத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக ஊர் திரும்பி வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்ததாகக் குறிப்பிடுகிறார். அந்தக் காலகட்டத்தில்தான் சொந்த மண்ணில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் பலமாக உருவெடுத்துள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in