தைப்பூ தரையில... மாசிப்பூ மரத்துல...! - மண்ணோடு மணக்கும் மாம்பழ வாழ்க்கை

மாந்தோப்பில் மனோகர்

மாந்தோப்பில் மனோகர்

Updated on
3 min read

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த எம்.மனோகர் (46), ஐந்து ஏக்கரில் மா சாகுபடி செய்து வருகிறார். தற்போது 90 வயதாகும் இவரது தந்தை மன்னப்பன், ஒரு மாம்பழ மொத்த வியாபாரி.

தந்தையின் அடிச்சுவட்டில் சிறு வயதிலிருந்தே மாந்தோப்புகளுடனும் மாங்காய்களுடனும் பிணைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வரும் மனோகர், இன்று சென்னையின் முக்கிய மாம்பழப் பெரு வியாபாரிகளில் ஒருவர். சொந்த நிலம் தவிர, சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான மாந்தோப்புகளைக் குத்தகைக்கு எடுத்துப் பராமரித்து வருகிறார்.

மாட்டு வண்டி முதல்...

“சிறு வயதில் மாடுகள் பூட்டிய கட்டை வண்டியில் மாங்காய் ஏற்றியிருக்கிறோம். பிறகு டயர் வண்டி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், மினி டோர், டாடா ஏஸ் என கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இப்போது லாரிகளில் காய் ஏற்றுகிறோம்.

தமிழ்நாட்டின் கோவை, திருச்சி உள்பட அனைத்துப் பெருநகரங்களுக்கும் காய் அனுப்புகிறோம். கேரளத்துக்கு அதிக அளவிலும், வட இந்தியாவில் வாரணாசி வரையிலும் எங்கள் மாங்காய் சென்று கொண்டிருக்கிறது” என்கிறார் மனோகர்.

ஈரான் போரும் சரிந்த விலையும்

இந்த ஆண்டு விளைச்சல் குறித்துக் கேட்டபோது, “இந்த ஆண்டு நல்ல விளைச்சல். எனினும் போதுமான விலை கிடைக்கவில்லை. தோட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் விலையாக இமாம்பசந்த் கிலோ 70 முதல் 100 ரூபாய், அல்போன்சா 20 முதல் 35 ரூபாய், மல்லிகா மற்றும் காளப்பாடி 20 முதல் 30 ரூபாய், பங்கனப்பள்ளி 15 முதல் 22 ரூபாய், நீலம் 15 முதல் 20 ரூபாய், செந்தூரா 10 முதல் 20 ரூபாய், ருமானி 10 முதல் 17 ரூபாய், ஒட்டு 5 முதல் 7 ரூபாய் என விலை போகிறது. கடைகளில் சில்லறை விலை இதைவிட அதிகம்.

இந்த ஆண்டு போதிய விலை கிடைக்காததற்கு மத்திய ஆசியாவில் நடைபெறும் ஈரான் போர்தான் முக்கியக் காரணம். நம்மூர் மாம்பழங்களுக்கும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கும் அரபு நாடுகள்தான் முக்கிய சந்தை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in