

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் முறையற்ற மழையளவு, தமிழக விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனால், குறைந்த பராமரிப்புச் செலவில் ஓரளவு நிலையான மகசூல் தரும் பயிர்களை நோக்கி விவசாயிகள் நகரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், கடந்த 20 ஆண்டுகளாக கரிசல் மண் பகுதிகளில் மக்காச்சோளச் சாகுபடி முதன்மை பெற்றுள்ளது.
மக்காச்சோளத்தின் சிறப்புகளும் சவால்களும்: இயந்திரம் மூலம் எளிதாக அறுவடை செய்யும் வசதி மற்றும் அறுவடைக்குக் காலகெடு இல்லாதது போன்ற காரணங்களால் விவசாயிகள் மக்காச்சோளத்தை விரும்புகின்றனர். இருப்பினும், சமீபகாலமாக ‘படைப்புழு’ தாக்குதலால் பெரும் இழப்பைச் சந்திப்பதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இதற்குத் தீர்வாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் பில் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலனாக, உயிரி உரங்கள் மூலம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.