

சவால்கள் நிறைந்த விவசாயத்தில், மகேஸ்வரி என்ற பெண், தனி ஒரு நபராக போராடி சாதித்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த இவர், கணவனை இழந்த நிலையிலும், தனது குடும்பத் தொழிலான விவசாயத்தை தொடர்கிறார்.
நெல் விவசாயியான மகேஸ்வரி, முதன்முறையாக மத்திய அரசின் சொட்டு நீர் பாசன திட்டம் மூலம் பச்சை மிளகாய் சாகுபடியில் இறங்கி அதிக மகசூலை பெற்றிருக்கிறார்.
இதுபற்றி மகேஸ்வரி கூறும்போது, “3 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்து வந்தேன். அருகே உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பச்சை மிளகாய் மற்றும் பாகற்காய் சாகுபடி செய்யத் தொடங்கினேன்.