திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 20 ஆண்டு ஆராய்ச்சிக்கு பலன்: ‘காவேரி பூவன்’ ரகம் விரைவில் வெளியாகிறது

வந்தாச்சு... வந்தாச்சு... வரித்தேமல் வைரஸ் பிரச்சினைக்கு தீர்வு வந்தாச்சு!
காவேரி பூவன் கன்றுகளை ஆராய்ச்சித் திடல் வளர்ப்புக்காக விவசாயிகளுக்கு வழங்கிய இயக்குநர் ஆர்.செல்வராஜன்.

காவேரி பூவன் கன்றுகளை ஆராய்ச்சித் திடல் வளர்ப்புக்காக விவசாயிகளுக்கு வழங்கிய இயக்குநர் ஆர்.செல்வராஜன்.

Updated on
3 min read

மத்​திய அரசின் கட்​டுப்​பாட்​டில் உள்ள இந்​திய வேளாண் ஆராய்ச்​சிக் கழகத்​தின் பரிந்​துரைப்​படி, 1993ஆம் ஆண்டு திருச்சி மாவட்​டம் போதாவூரில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (National Research Center for Banana – NRCB) சுமார் 8 ஏக்​கர் பரப்​பள​வில் தொடங்​கப்​பட்​டது. மேலும், 90 ஏக்​கர் பரப்​பள​வில் மையத்​துக்கு சொந்​த​மான ஆராய்ச்சி பண்ணை வயல் உள்​ளது. இங்கு 520 வாழை ரகங்​கள் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

பணப் பயி​ரான வாழை​யின் மகசூல் பெருக்​கம், ஊட்​டச்​சத்து பெருக்​கம் தொடர்​பாக இந்த மையத்​தில் பல்​வேறு ஆராய்ச்​சிகள் நடை​பெற்று வரு​கின்​றன. வாழை​யில் பல்​வேறு ரகங்​கள் இருந்​தா​லும் 25 ரகங்​கள் மட்​டுமே உலகம் முழு​வதும் பயன்​பாட்​டில் உள்​ளன. இந்​தி​யாவை பொறுத்​தவரை 9.2 லட்​சம் ஹெக்​டேரில் வாழை சாகுபடி செய்​யப்​படு​கிறது.

ஜி-9 ரக வாழை 55 சதவீத​மும், பூவன் ரகம் 17 சதவீத​மும் சாகுபடி செய்​யப்​படு​கிறது. இந்த பூவன் வாழை நமது பாரம்​பரிய கலாச்​சார, பண்​பாடு நிகழ்​வு​களி​லும், விழாக்​களி​லும் முக்​கிய இடம் பிடிக்​கிறது. தமிழகத்​தில் மண், தட்​பவெப்ப நிலை​யானது பூவன் வாழை சாகுபடிக்கு சாதக​மாக இருப்​ப​தால் அதி​கள​வில் பயி​ரிடப்​படு​கிறது. குறிப்​பாக காவிரி டெல்டா மாவட்​டங்​களில் அதி​களவு சாகுபடி செய்​யப்​படு​கிறது.

பூவன் ரகத்​தில் மட்​டும்​தான் துவர்ப்​பு, இனிப்​பு, புளிப்பு ஆகிய 3 சுவை​யும் இருக்​கும். திரு​மணம் போன்ற விருந்து நிகழ்ச்​சிகள், ஓட்​டல்​களில் அதி​கம் பயன்​படுத்​தப்​படும் இதன் இலைகள் கிழி​யாது. வாழைக் கன்​றுகள் அதி​கம் வரும். கற்​பூர​வள்ளி 14 மாதத்​தில்​தான் அறு​வடைக்கு தயா​ராகும். ஆனால், பூவன் 8 மாதத்​திலேயே அறு​வடைக்கு தயராகி​விடும்.

இதனால் டெல்டா விவ​சா​யிகளின் முதல் தேர்​வாக பூவன் ரகம் உள்​ளது. பூவன் ரக வாழை​யில் பல நூறு ஆண்​டு​களாக கருங்​கோடு வரித்​தேமல் எனப்​படும் வைரஸ் நோய் தாக்​கம் இருந்து வரு​கிறது. இதனால் அதி​களவு மகசூல் இழப்பு மற்​றும் வாழை இலை​யின் தரம் பாதிக்​கப்​படு​கிறது. இந்த நோய் தாக்​கிய மரத்​தின் இலைகளில் நீள வாக்​கில் பொன்மஞ்​சள் நிற கோடு​கள் தோன்றி பின்​னர் கருங்​கோடு​களாகமாறும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in