கேழ்வரகில் கலக்கும் கர்ணன்

கேழ்வரகு வயல். உள்படம்: கர்​ணன்.

கேழ்வரகு வயல். உள்படம்: கர்​ணன்.

Updated on
1 min read

செயற்கை உரங்​களும் வீரியமிக்க பூச்​சிக்​கொல்​லிகளும் நிலத்​தை​யும் மனித உடலை​யும் பாழாக்கு​வதை உணர்ந்த சிவகங்​கை, பையூரைச் சேர்ந்த எல்​.ஐ.சி ஊழியர் கர்​ணன், தாமே களத்தில் இறங்கி இயற்கை விவ​சா​யம் செய்​யத் தீர்​மானித்​தார்.

இதற்​காகச் சிவகங்கை ராகினிபட்​டி​யில் 2.8 ஏக்​கர் நிலம் வாங்​கி, அதில் பாரம்​பரிய நெல் ரகங்​களை​யும் காய்​கறிகளை​யும் பயி​ரிட்டு வரு​கிறார். மழைக்​காலத்​தில் நெல் சாகுபடி செய்​யும் இவர், கோடைக் காலத்​தில் சிறு​தானி​யங்​களைச் சாகுபடி செய்​கிறார். அந்த வகை​யில், கடந்த சில மாதங்​களுக்கு முன்பு பயி​ரிட்ட ’கோ-15’ ரகக் கேழ்​வரகைத் தற்​போது வெற்​றிகர​மாக அறு​வடை செய்து வரு​கிறார்.

சாகுபடி அனுபவம்

“எப்​பொழுதும் மாப்​பிள்​ளைச் சம்​பா, கருப்​புக் கவுனி, தூயமல்லி போன்ற பாரம்​பரிய நெல் ரகங்​களைத்​தான் சாகுபடி செய்​வேன். இந்த ஆண்டு கோடை​யில் ‘கோ-15’ ரகக் கேழ்​வரகைப் பயி​ரிட்​டேன். 3 முதல் 4 அடி உயரம் வரை வளரக்​கூடிய இந்த ரகம், வறட்​சி​யைத் தாங்கி வளரும் தன்​மை​யுடையது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in