

விவசாயிகள் தங்கள் உரச்செலவைக் குறைத்து, மகசூலைப் பெருக்க பாஸ்பரஸ் (மணிச்சத்து) மேலாண்மை மிக அவசியம். வழக்கமாக மண்ணில் இடப்படும் பாஸ்பரஸ் உரங்களில் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே பயிர்களுக்குக் கிடைக்கின்றன; குறிப்பாக, காரத்தன்மை கொண்ட களிமண் மற்றும் கரிசல் மண்ணில் இவை கரையாத உப்பாக மாறி வீணாகின்றன.
இதற்கு எளிய தீர்வாக விளங்கும் ‘செறிவூட்டப்பட்ட தொழு உரம்’, பாஸ்பரஸ் பயன்பாட்டுத்திறனை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்துகிறது. இதனால் வேர் வளர்ச்சி தூண்டப்பட்டு வறட்சி தாங்கும் திறன் கூடுவதோடு, மண்ணின் கட்டமைப்பும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் மேம்படுகின்றன.
இரும்பு, துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச்சத்துகளின் கிடைப்புத்திறன் அதிகரிப்பதால், ஒட்டுமொத்த பாஸ்பரஸ் உரத் தேவையில் 20 முதல் 30 சதவீதம் வரை மிச்சமாவதோடு, 10 முதல் 20 சதவீதம் கூடுதல் மகசூலும் கிடைக்கிறது.
தயாரிக்கும் முறை: இத்தொழில்நுட்பம் குறித்துக் கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர். மணிகண்டன் கூறுகையில், ‘‘சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் மூலம் செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க 750 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 100 முதல் 250 கிலோ சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் மற்றும் தேவையான அளவு சிவப்பு மண் அல்லது களிமண் தேவை.