10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் டிராகன் பழச் சாகுபடி: டெல்டா விவசாயிகளுக்காகத் தோட்டக்கலைத் துறை அமைத்த மாதிரிப் பண்ணை

மருங்​குளம் பண்​ணை​யில் உள்ள டிராகன் பழச் செடிகள்.

மருங்​குளம் பண்​ணை​யில் உள்ள டிராகன் பழச் செடிகள்.

Updated on
2 min read

முன்​பெல்​லாம் கிராமப்​புறங்​களில் சப்​பாத்​திக்​கள்​ளிச் செடிகளில் காய்க்​கும் பழங்​களைச் சிறு​வர்​கள் விரும்​பிச் சாப்​பிடு​வது உண்​டு. காலப்​போக்​கில் மக்​கள் இச்​செடிகளை அழித்தனர்.

அதே​நேரத்​தில், கள்ளி வகை​களில் ஒன்​றானதும் மருத்​து​வக் குணங்​கள் நிறைந்​தது​மான டிராகன் பழங்​களைச் சீனா உள்​ளிட்ட பல நாடு​கள் சாகுபடி செய்து உலகெங்​கும் விற்​பனைக்கு அனுப்பி வரு​கின்​றன.

பெரும்​பாலும் வறட்​சி​யைத் தாங்கி வளரக்​கூடிய டிராகன் பழச் செடிகள், தற்​போது இந்​தி​யா​விலும் பல இடங்​களில் சாகுபடி செய்​யப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக, நீர்ப்​பற்​றாக்​குறை உள்ள பகு​தி​களில் இச்​சாகுபடி மூலம் விவ​சா​யிகள் நல்ல மகசூல் பெற்று வரு​கின்​றனர்.

அந்த வகை​யில், காவிரி டெல்டா மாவட்​டங்​களி​லும் சாகுபடிக்​கான நீர்ப்​பற்​றாக்​குறை ஏற்​படும் சூழலில், விவ​சா​யிகள் டிராகன் பழச் சாகுபடியை மேற்​கொண்டு அதிக லாபம் பெறத் தோட்​டக்​கலைத்​துறை சார்​பில் பயிற்​சிகளும் ஆலோ​சனை​களும் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

மேலும், விவ​சா​யிகளுக்​குத் தேவை​யான டிராகன் பழச் செடிகளை வழங்​கிட​வும், சாகுபடி முறை​களை அவர்​கள் நேரில் கண்டு உணரும் வகை​யிலும் தஞ்​சாவூர் அருகே மருங்​குளத்​தில் உள்ள அரசுத் தோட்​டக்​கலை பண்​ணை​யில் 10 ஆயிரம் சதுர அடி பரப்​பள​வில் மாதிரித் தோட்​டம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in