

நம் வயலில் 10 பூச்சியினங்கள் இருந்தால், அவற்றைப் பிடித்துத் தின்ன அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மற்ற பூச்சியினங்கள் இருக்கின்றன. பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் 200 வகையான பறவைகள் இருக்கின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதால், நம் விவசாயத்துக்கு தீமை செய்யும் பூச்சிகள் மட்டுமின்றி, நன்மை செய்யும் பூச்சிகளும் கொல்லப்படுகின்றன.
இந்தப் பூச்சியினங்களையே தங்கள் உணவாகக் கொண்டிருக்கும் பறவைகள், உணவு இல்லாமல் தவிக்கின்றன. நமது செயலால் உணவுச் சங்கிலி அறுபட்டுப் போகிறது. ஆடு, மாடுகள் உண்ணாத செடி, கொடிகளை அடையாளம் காண வேண்டும்.