தென்னையை மிஞ்சும் வெள்ளரி சாகுபடி: ஒரு ஏக்கர் பசுமைக்குடிலில் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் லாபம்

பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி செய்யும் இளம் விவசாயி அரவிந்த் விஜய்.

பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி செய்யும் இளம் விவசாயி அரவிந்த் விஜய்.

Updated on
2 min read

‘தென்​கொங்கு சீமை’ என அழைக்​கப்​படும் கோவை மாவட்​டத்​தின் தெற்​குப் பகு​தி​யான பொள்​ளாச்​சி​யில், ஒரு காலத்​தில் நிலக்​கடலை, பருத்​தி, கம்பு மற்​றும் சோளம் ஆகிய​வையே பிர​தான பயிர்​களாக இருந்​தன.

ஆற்​றுப்​பாசனம் மிகுந்த ஆனைமலை பழைய ஆயக்​கட்டு பகு​தி​களில் மட்​டுமே நெல் விவ​சா​யம் நடை​பெற்று வந்​தது. 1960களுக்​குப் பிறகு ஆழி​யாறு அணை கட்​டப்​பட்​ட​தால் கிடைத்த நீர்​வச​தி​யைப் பயன்​படுத்​தி, இப்​பகுதி விவ​சா​யிகள் நீண்​ட​காலப் பயி​ரான தென்னை சாகுபடிக்கு மாறினர். பல ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் தென்னை பயி​ரிடப்​பட்​ட​தால், பொள்​ளாச்சி ‘தென்னை நகரம்’ என்ற பெரு​மை​யைப் பெற்​றது.

தென்னை விவ​சா​யிகளின் தற்​போதைய சவால்​கள்

கடந்த சில ஆண்​டு​களாகப் பொள்​ளாச்சி தென்னை விவ​சா​யிகள் கடும் சவால்​களைச் சந்​தித்து வரு​கின்​றனர். முன்பு தேங்​காய் மற்​றும் கொப்​பரை விலை வீழ்ச்​சிக்​காகப் போராடிய விவ​சா​யிகள், தற்​போது தென்னை மரங்​களைக் காப்​பாற்​றவே திணறும் நிலைக்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளனர். வெள்ளை ஈ தாக்​குதல், கூன் வண்​டு,

கேரளா வாடல் நோய் மற்​றும் கடும் வறட்சி ஆகிய​வற்​றால் தென்னை விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரம் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், மனவேதனை​யுடன் தென்னை மரங்​களை வெட்டி அகற்​றி​விட்​டு, மாற்​றுப் பயிர்​களை நோக்கி சில விவ​சா​யிகள் நகரத் தொடங்​கி​யுள்​ளனர்.

வேளாண் பட்​ட​தா​ரி​யின் நவீன முயற்சி

இந்​நிலை​யில், பொள்​ளாச்சி அடுத்த பொன்​னாயூர் பகு​தி​யைச் சேர்ந்த அரவிந்த் விஜய் என்ற இளம் வேளாண் பட்​ட​தா​ரி, தென்​னைக்கு மாற்​றாகப் பசுமைக்​குடில் (Green house) விவ​சா​யத்​தைத் தொடங்​கிப் பலரது கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளார்.

நோய் தாக்​குதலால் பாதிக்​கப்​பட்ட தென்னை மரங்​களை அகற்​றி​விட்​டு, தனது ஒரு ஏக்​கர் நிலத்​தில் சுமார் ரூ.45 லட்​சம் முதலீட்​டில் ‘பாலி ஹவுஸ்’ எனப்​படும் உயர்​தொழில்​நுட்ப பசுமைக்​குடில் அமைத்​து, அரசின் மானி​யத்​துடன் வெள்​ளரி சாகுபடி​யில் ஈடு​பட்​டுள்​ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in