கரிசல் பூமியில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள்

கரிசல் பூமியில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள்
Updated on: 
3 min read

ஒட்டப்பிடாரம் என்பது முற்றிலும் கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட பகுதியாகும். ‘வானம் பார்த்த பூமி’ எனப்படும் மானாவாரி நிலங்கள் நிறைந்த இந்தப் பகுதியில், கிணற்றுப் பாசனம் மற்றும் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி விவசாயிகள் பூஞ்செடிகளைப் பயிரிட்டு வருகிறார்கள்.

ஆரைக்​குளம், குலசேகரநல்​லூர், குப்​பனாபுரம், ஓசனூத்து, கீழமங்​கலம், மேலமங்​கலம், கீழமுடிமண், மேலமுடிமண், சிலோன் காலனி, சங்​கரராஜாபுரம், அக்​கநாயக்​கன்​பட்டி, ஓட்​டுடன்​பட்டி, லட்​சுமிபுரம் என ஒட்​டப்​பிடாரத்​தைச் சுற்​றியுள்ள பல்​வேறு கிராமங்​களில், சுமார் 1000-க்​கும் மேற்​பட்ட ஏக்​கர் நிலப்​பரப்​பில் மலர் சாகுபடி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது.

இங்கு ஆண்​டுக்​குச் சுமார் 8 மாதங்​கள் வரை மல்​லிகைப்​பூக்​கள் அரும்பி மணக்​கின்​றன. அத்​துடன், மஞ்​சள் மற்​றும் ஆரஞ்சு நிறங்​களில் கண் கவரும் கேந்​திப்​பூக்​கள் (செண்​டுப்பூ) ஆண்டு முழு​வதுமே சாகுபடி செய்​யப்​படு​கின்​றன.

இங்கு தினசரி அறு​வடை செய்​யப்​படும் மலர்​கள் அனைத்​தும் உடனடி​யாகத் தூத்​துக்​குடி மலர் சந்​தைக்​குக் கொண்டு செல்​லப்​பட்டு விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. இச்​சாகுபடி தொழில், ஒட்​டப்​பிடாரம் பகுதி​யில் உள்ள 1000-க்​கும் மேற்​பட்ட குடும்​பங்​களுக்​கு முதன்மை வாழ்​வாதா​ர​மாகத் திகழ்​கிறது.

மல்லிக்கு மழை ஆகாது

இது​குறித்து ஆரைக்​குளத்​தைச் சேர்ந்த முன்​னணி மலர் விவசாயி செ.பாலமுருகன் தனது அனுபவங்​களைப் பகிர்ந்து கொண்​டார். “எங்​கள் ஒட்​டப்​பிடாரம் பகுதி ஒரு கந்​தக பூமியாகும். இங்​குள்ள நிலங்​களில் நாங்​கள் மல்​லிகைப் பூ, கேந்​திப்பூ, கோழிக்​கொண்​டைப் பூ ஆகிய​வற்​றைச் சாகுபடி செய்​கிறோம். இவை அனைத்​துமே கிணற்​றுப் பாசனம் அல்​லது ஆழ்​துளைக் கிணற்​றுப் பாசன நீரை நம்​பியே வளர்க்​கப்​படு​கின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in