நாடெங்கும் வரவேற்பைப் பெற்ற அரசம்பட்டி தென்னங்கன்று

அரசம்பட்டியில் உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகள். (உள்படம்: ஜே.கென்​னடி)

அரசம்பட்டியில் உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகள். (உள்படம்: ஜே.கென்​னடி)

Updated on
2 min read

தென்னங்கன்று வளர்ப்​பது என்​பது மிக​வும் சவாலான முறை. நல்ல தாய் மரத்​திலிருந்து விளைந்த திட​மான காயை தேர்ந்​தெடுக்க வேண்​டும். அதற்கு சரி​யான மண் வளத்தை அளிக்க வேண்​டும். அதோடு, பரு​வத்​துக்கு ஏற்ப தேவை​யான உரம், நீர், பூச்சி / நோய் மேலாண்மை என பக்​கு​வ​மாக கவனித்து வளர்த்​தால் மட்​டுமே தென்னங்கன்று நமக்கு முழு பலன் அளிக்​கும்.

கிருஷ்ணகிரி மாவட்​டத்​தில் 40 ஆயிரம் ஏக்​கரில் 40 லட்​சம் தென்னை மரங்​கள் உள்​ளன. இம்​மரங்​களில் ஆண்​டுக்கு சுமார் 5 கோடி தேங்​காய் உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. இந்த தென்னை மரங்​களை நம்பி தேங்​காய் மண்​டிகளும், துடைப்​பம், நார் தயாரிக்​கும் சிறு​தொழில்​களும், கொப்​பரை, தென்னை ஓடு பதப்​படுத்​துதல் உள்​ளிட்ட பல்​வேறு தொழில்​கள் மூலம் சுமார் 2 லட்​சத்​துக்கும் மேற்​பட்ட விவ​சா​யிகள், வியா​பாரி​கள், தொழிலா​ளர்​கள் நேரடி​யாக​வும், மறை​முக​மாக​வும் பயன்​பெற்று வரு​கின்​றனர்.

கிருஷ்ணகிரி மாவட்​டத்​தில் தென்னை வளர்ப்பு மற்​றும் அதனை சார்ந்த தொழில்​களில் இவ்​வளவு பேர் ஈடு​பட்​டிருக்​கும் நிலை​யில், அரசம்​பட்டி தென்​னங்​கன்று உற்​பத்தி தனிக்​கவனம் பெற்​றிருக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in