உலகின் பெரிய சூப்பர் கணினி

உலகின் பெரிய சூப்பர் கணினி
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற ஆராய்ச்சிப் பல்கலைக் கழகமான நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் உலகின் மிகப் பெரிய குவாண்டம் கணினியை உருவாக்கியிருக்கிறது. சிலிக்கான் கொண்டு செய்யப்பட்ட இந்தக் கணினி இன்றைய கணினிகள் போல் அல்லாமல் குவாண்டம் கணித்தல் முறையில் ‘0’ மற்றும் ‘1’ என்கிற இரட்டை எண்களை வேறு விதமாகப் பயன்படுத்துகிறது. கியூபிட் (Qubit) எனப்படும் குவாண்டம் கணித்தல் முறையில் ‘0’ அல்லது ‘1’ என்பதுடன் ‘0’ மற்றும் ‘1’ ஆகியவற்றின் இரு நிலை இருப்பும் (Superposition) செயல்படும். இதன் மூலம் லட்சக்கணக்கான வருடங்களில் செய்யக்கூடிய கணினி பிராசஸிங்கைச் சில தினங்களில் முடித்துவிட முடியும்.

உலக சாதனை

“சிலிக்கானை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஆஸ்திரேலியா உலகத்துக்கே முன்னோடியாகத் திகழ்கிறது. இதை உருவாக்கியதன் மூலமாக ஒட்டுமொத்த உலகம் அடைந் திருக்கும் வளர்ச்சியைவிட மூன்றாண்டுகள் முன்னோக்கி ஆஸ்திரேலியா நகர்ந்துவிட்டது” என குவாண்டம் கணினியை உருவாக்கிய குழுவை வழிநடத்திய வரும் குவாண்டம் கணித்தல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்துக்கான ஆஸ்திரேலியா ஆராய்ச்சி கழக மையத்தின் (CQC2T) இயக்குநருமான பேராசிரியர் மிஷேல் சைமன்ஸ் பெருமையாகக் கூறுகிறார்.

ஏற்கெனவே உலக நாடுகளில் ஆங்காங்கே குவாண்டம் கணினி ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், சிலிக்கானை உபயோகித்ததன் மூலம் கணினி சிப் தொழிலில் மிகக் குறைந்த செலவில் குவாண்டம் கணினி யைத் தயாரித்த பெருமை நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேரும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மற்றுமொரு பிரம்மாண்டமான கியூபிட் கணினித் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான சோதனைக் கூடத்தையும் இந்த மையம் இதே ஆண்டு நிறுவிவிட்டது!

நியூ சவுத் வேல்ஸின் பெருமைகள்

2012-ல் சிலிக்கானில் பதிக்கப்பட்ட ஒற்றை பாஸ்ஃபரஸ் அணுவின் எலெக்ட்ரான் ஒன்றின் சுழற்சியைக் கொண்டு முதல் கியூபிட்டை உருவாக்கியது.

2012-ல் உலகின் முதல் ஒற்றை அணு டிரான்ஸிஸ்டரை உருவாக்கியது.

2015-ல் சிலிகானால் செய்யப்பட்ட முதல் குவாண்டம் லாஜிக் கேட்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in