வேலை வேண்டுமா?- ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்

வேலை வேண்டுமா?- ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்
Updated on
1 min read

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புது டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் பணிகளில் 125 காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், சமூகவியல், மானுடவியல், பொருளாதாரம், வரலாறு, புவியியல் என பலதரப்பட்ட பாடப் பிரிவுகளில் இந்தக் காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண், ஆராய்ச்சிப் பணி, புத்தக வெளியீடு, பாடம் நடத்தும் திறன், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். இது ஒரு மத்திய அரசுப் பல்கலைக்கழகம் என்பதால் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு உண்டு.

விண்ணப்பத்தை >www.jnu.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப் பிரிவினரும், ஓ.பி.சி வகுப்பினரும் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினரும், மாற்றுத் திறனாளிகளும் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

மேற்கண்ட பணியிடங்களுக்கு மே மாதம் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பதவி மற்றும் பாடப்பிரிவு வாரியான காலியிடங்கள், கல்வித் தகுதிகள் போன்ற விவரங்களை இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in