ஊக்கமளிக்கும் ஊக்கத்தொகை: இடைநின்று போவதைத் தடுக்க வங்கி உதவி

ஊக்கமளிக்கும் ஊக்கத்தொகை: இடைநின்று போவதைத் தடுக்க வங்கி உதவி
Updated on
1 min read

பொருளாதார நெருக்கடி காரணமாகவோ வேறு தனிப்பட்ட பிரச்சினைகளாலோ படிப்பைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்க முன்வருகிறது எச்.டி.எஃப்.சி. வங்கி. ஆறாம் வகுப்பு முதல் முனைவர் பட்டம்வரை படித்துவரும் அனைத்து மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கடந்த மூன்றாண்டுகளுக்குள் தங்களுடைய குடும்பத்தின் பொருளாதாரப் பொறுப்பை ஏற்றவரின் மரணம், விபத்து அல்லது உடல் உபாதை காரணமாகச்

சம்பாதிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர், ஆதரவற்றவர், சுய தொழிலில் நஷ்டமடைந்தவர் உள்ளிட்டோர் மாணவராக இருப்பின் இதற்கு விண்ணப்பிக்கலாம். அரசு, அரசுதவி, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் இதற்குத் தகுதியானவர்களே. இதுபோக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வருடத்துக்கு எவ்வளவு தரப்படும்?

பள்ளி மாணவர்கள்: ரூ.10,000/-

கல்லூரி மாணவர்கள்: ரூ.25,000/-

பாலிடெக்னிக் மாணவர்கள்: ரூ.25,000/-

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 15 ஜூன் 2019

விண்ணப்பிக்க: https://bit.ly/2YJgv6j

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in