ஊக்குவிக்கும் ஊக்கத்தொகை: பி.எச்டி. மாணவர்களுக்கு உதவும் கூகுள்

ஊக்குவிக்கும் ஊக்கத்தொகை: பி.எச்டி. மாணவர்களுக்கு உதவும் கூகுள்
Updated on
1 min read

கணினி அறிவியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் மாணவர்களுக்கு கூகுள் நிறுவனம் ஊக்கத்தொகை வழங்கிவருகிறது.

தகுதி: கணினி அறிவியல் அல்லது கணினி சார் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்ற பிறகு Machine Learning, Privacy and Security, Mobile Computing உள்ளிட்ட 12 கணினி சார் பிரிவுகள் ஏதோ ஒன்றில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் மாணவர்கள்.

தொகை, சலுகை: நான்காண்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். கூகுள் நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப், வழிகாட்டுதல் முகாமில் பங்கேற்கும் வாய்ப்பு.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 ஏப்ரல் 2019

விண்ணப்பிக்க: http://www.b4s.in/vetrikodi/GPF2

அறிவியல் கைவண்ணத்துக்குப் பரிசு

கடல் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உலக அளவில் மாணவர்களுக்கு ஏற்படுத்த ‘Science Without Borders’ என்ற சர்வதேச ஓவியப் போட்டி நடத்தப்பட்டுவருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘கலீத் பின் சுல்தான் லிவ்விங் ஓஷன்ஸ்’ அறக்கட்டளை இந்தப் போட்டியை நடத்துகிறது. தங்களுடைய படைப்பாற்றலை வெளிக்காட்டும்போதே இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் சிந்தனையை இளையோர் மனத்தில் விதைப்பதே இந்தப் போட்டியின் குறிக்கோள்.

சர்வதேச அளவில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் 11-19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். குறிப்பிட்ட வயது வரம்புக்கு உட்பட்டு இருந்தும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்க நேரிட்டால் இதில் கலந்துகொள்ள முடியாது.

சுயமாகக் கற்பனை செய்து பென்சில், மார்க்கர், க்ரயான், இங்க்-ஃபெல்ட் (Ink-Felt) ஆகியன கொண்டு வரைந்த படத்தையோ அல்லது தூரிகைகொண்டு தீட்டப்பட்ட ஓவியத்தையோ அனுப்பலாம். ஆனால், ஒளிப்படங்களோ, மற்றப் படங்களின் நகலோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. உங்களுடைய ஓவியத்துக்குப் பொருத்தமான விவரணையை ஆங்கிலத்தில் எழுதி அனுப்ப வேண்டும்.

ஆழ்கடலில் உள்ள வளங்களை அழிவில் இருந்து காக்க இளம் கரங்கள் படைப்பாற்றலின் வழியாக இணைவதற்கான அழைப்பு இது.

‘மனிதர்களும் கடலும்’, ‘கடல் வாழ் உயிரினங்களின் நடமாட்டம்’, ‘கடலுக்குள் நிகழும் செயல்பாடுகள்’ ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்களுடைய கலைப்
படைப்பை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தலைப்பு குறித்த விரிவான விளக்கத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

முதல் பரிசு – 500 டாலர்கள்

இரண்டாம் பரிசு - 300 டாலர்கள்

மூன்றாம் பரிசு – 200 டாலர்கள்

இரண்டு பிரிவைச் சேர்ந்தவர் களுக்கும் தலா மூன்று பரிசுகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
22 ஏப்ரல் 2019

ஓவியங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Khaled bin Sultan Living Ocenas Foundation,

Science Without Borders Challenge

P.O.Box 5913

Annapolis, MD 21403. USA.

முழு விவரங்களுக்கு:
http://www.b4s.in/vetrikodi/SWB5

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in