

குடும்ப நிகழ்வுகள் சார்ந்து சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி என்கிற ஊருக்குக் கடந்த 40 ஆண்டுகளில் பல முறை சென்று வந்திருப்பேன். ஆனால், என் குடும்பத்தினரோ உறவினர்களோ அந்த ஊருக்குப் பெயர் தந்த மரம் குறித்து ஓரிரு வார்த்தைகள்கூடப் பேசியதாக நினைவில்லை.
இயற்கையை-தாவரங்களை மையமாகக் கொண்ட தமிழ்ப் பண்பாடு, எப்படி அதிலிருந்து பெருமளவு விலகிவிட்டது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
வடஇந்தியக் காட்டுயிர்கள், பறவைகள் குறித்துப் படிக்கும்போதெல்லாம், பல இடங்களில் அவற்றுடன் இடம்பெறும் ஒரு மரம் மஹுவா. இது இலுப்பையின் துணைவகை.