

ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகளை நம்பிய விவசாய சாகுபடி முறையில், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை. மேலும், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்படுவதால், தாவரங்களை விளைவிக்கும் மண்ணின் திறன் குறைந்துகொண்டே வருகிறது. இந்த சாகுபடி முறையில் ஆண்டுக்கு ஆண்டு செலவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சாகுபடி செலவு அதிகரித்து, விளைச்சல் குறைந்த காரணத்தால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு, சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயியே இல்லாத நிலையில், விவசாயமும் அழிந்துவிடும்.