

பூமர்கள், 2கே கிட்ஸ், ஜென் இசட் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நம் கண்களுக்கு முன் உருவாகி வளர்ந்துகொண்டிருப்பது ஏஐ தலைமுறை! அதென்ன ஏஐ தலைமுறை? சாட்ஜிபிடி உள்ளிட்ட நவீன ஏஐ சேவைகளை இயல்பாகப் பயன்படுத்தும் புதிய தலைமுறை.
எல்லா வயதினரும்தான் இப்போது சாட்ஜிபிடியைப் பயன்படுத்துகின்றனர். அப்படியிருக்க, அதென்ன ஸ்பெஷலாக ஏஐ தலைமுறை? ஆம், இந்த ஏஐ தலைமுறை தனித்துவமானதுதான். சாட்ஜிபிடியை உருவாக்கிய ‘ஓபன் ஏஐ’ நிறுவனர் சாம் ஆல்ட்மென் கூறும் உதாரணம் மூலம் ஏஐ தலைமுறையைச் சரியாக அடையாளம் காணலாம்.