முன்னாள் சாம்பியன் ஆஸி.யை வீழ்த்திய ஜிம்பாப்வே: 23 ரன்களில் அசத்தல் வெற்றி | T20 WC 2026

முன்னாள் சாம்பியன் ஆஸி.யை வீழ்த்திய ஜிம்பாப்வே: 23 ரன்களில் அசத்தல் வெற்றி | T20 WC 2026
Updated on
2 min read

கொழும்பு: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னாள் உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 23 ரன்களில் வீழ்த்தி அப்செட் செய்துள்ளது ஜிம்பாப்வே அணி. இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியின் பிளெஸ்ஸிங் முசரபானி மற்றும் பிராட் எவான்ஸ் அபாரமாக பந்து வீசி இருந்தனர்.

‘குரூப்-பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இதில் விளையாடின. இந்த ஆட்டம் கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது. ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் பிரையன் 64, ததிவனாஷே 35, ரியான் 35, கேப்டன் சிக்கந்தர் ராசா 25 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டாய்னிஸ் மற்றும் கிரீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டியது. பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் ஜாஸ் இங்கிலிஸ் (8), கேமரூன் கிரீன் (0), டிம் டேவிட் (0), கேப்டன் டிராவிஸ் ஹெட் (17) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் மேக்ஸ்வெல் மற்றும் ரென்ஷா. மேக்ஸ்வெல் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் 6, பென் துவார்ஷியஸ் 6 ரன் எடுத்து எடுத்து விக்கெட்டை இழந்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை அளித்த ரென்ஷா விக்கெட்டை கைப்பற்றியது ஜிம்பாப்வே. அவர் 44 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸாம்பா 2 மற்றும் குனேமன் 0 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 23 ரன்களில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. இந்த தொடரில் அந்த அணிக்கு இது இரண்டாவது வெற்றியாக அமைந்தது. ஜிம்பாப்வே தரப்பில் பந்து வீசிய பிளெஸ்ஸிங் முசரபானி, 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு பந்து வீச்சாளரான பிராட் எவான்ஸ் 3.3 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை முசரபானி வென்றார்.

அச்சுறுத்தும் சின்ன அணிகள்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் - நெதர்லாந்து, இங்கிலாந்து - நேபாள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கி வந்து நெதர்லாந்து, நேபாளமும் தோல்வியை தழுவின. இந்த தொடரில் பல்வேறு உலக நாடுகளை சார்ந்த சின்ன அணிகள் ஐசிசியின் முழுநேர உறுப்பினராக உள்ள அணிகளுக்கு அச்சுறுத்தல் அளித்து வெற்றியை நழுவ விட்டுள்ளன.

இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய அணியை இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது. கடந்த 2007-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் சாம்பியன் ஆஸி.யை வீழ்த்திய ஜிம்பாப்வே: 23 ரன்களில் அசத்தல் வெற்றி | T20 WC 2026
முதல் வெற்றியை பதிவு செய்த இத்தாலி: நேபாள ரசிகர்களுக்கு ஹார்ட் பிரேக் | T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in