இந்​தி​யன் வெல்ஸ் மாஸ்​டர்ஸ் டென்னிஸ் அரை இறுதியில் பாம்ப்ரி ஜோடி

இந்​தி​யன் வெல்ஸ் மாஸ்​டர்ஸ் டென்னிஸ் அரை இறுதியில் பாம்ப்ரி ஜோடி

Published on

இந்தியன் வெல்ஸ்: அமெரிக்​கா​வின் இந்​தி​யன் வெல்ஸ் நகரில் இந்​தி​யன் வெல்ஸ் மாஸ்​டர்ஸ் டென்னிஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் இரட்​டையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் யுகி பாம்ப்ரி, சுவீடனின் ஆன்ட்ரே கோரன்​சன் ஜோடி ஆஸ்​திரி​யா​வின் அலெக்​சாண்​டர் எர்​லர், இத்​தாலி​யின் ஆண்ட்​ரியா வவாசோரி ஜோடி​யுடன் பலப்​பரீட்சை நடத்​தி​யது.

ஒரு மணி நேரம் 30 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் பாம்ப்​ரி, கோரன்​சன் ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறியது. ஆயிரம் புள்​ளி​கள் கொண்ட ஏடிபி மாஸ்​டர்ஸ் தொடரில் யுகி பாம்ப்ரி அரை இறு​திக்கு முன்​னேறு​வது இதுவே முதன்​முறை​யாகும். அரை இறுதி சுற்​றில் பாம்ப்​ரி, கோரன்​சன் ஜோடி பிரான்சின் ஆர்​தர் ரிண்​டர்க்​னெக், மொனாக்​கோவின் வாலண்​டைன் வச்​செரோட் ஜோடி​யுடன்​ மோதுகிறது.

இந்​தி​யன் வெல்ஸ் மாஸ்​டர்ஸ் டென்னிஸ் அரை இறுதியில் பாம்ப்ரி ஜோடி
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணிக்க இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in