ஆசிய விளையாட்டு போட்டியில் நீரஜ் சோப்ராவுக்கு பதிலாக யஷ்வீர்

ஆசிய விளையாட்டு போட்டியில் நீரஜ் சோப்ராவுக்கு பதிலாக யஷ்வீர்
Updated on
1 min read

லூதியானா: ஆசிய விளை​யாட்டு வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4 வரை ஜப்​பானில் உள்ள ஐச்​சி-நகோயா நகரில் நடை​பெறுகிறது. இந்த தொடரில் தடகள போட்​டிகளில் பங்​கேற்​கும் 73 பேர் கொண்ட இந்​திய அணி ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்டு இருந்தது. இந்​நிலை​யில் தற்​போது கூடு​தலாக 6 பேர் சேர்க்கப்பட்டுள்​ளனர். இந்த வகை​யில் புதுப்​பிக்​கப்​பட்ட 77 பேர் கொண்ட அணியை இந்​திய தடகள கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.

இதில் காயம் காரண​மாக விலகி உள்ள ஈட்டி எறிதல் நட்​சத்திரமான நீரஜ் சோப்​ரா​வுக்கு பதிலாக காமன்​வெல்த் விளையாட்​டில் வெண்​கலப் பதக்​கம் வென்ற யஷ்வீர் சிங் சேர்க்கப்​பட்​டுள்​ளார். அதேவேளை​யில், ஊக்​கமருந்து பயன்படுத்தி​ய​தாகக் கூறப்​படும் குற்​றச்​சாட்​டின் கீழ் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நோட்​டீஸ் அனுப்​பியதைத் தொடர்ந்​து, நீண்ட தூர ஓட்​டப்​பந்தய வீரர் அபிஷேக் பால் அணியில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளார்.

சமீபத்​தில் கிளாஸ்​கோ​வில் நடை​பெற்ற காமன்​வெல்த் விளையாட்​டுப் போட்​டிகளின் போது காயமடைந்த 110 மீட்​டர் தடை​தாண்​டும் ஓட்​டப்​பந்தய வீரர் தேஜஸ் ஷிர்​சே​யும் அணியில்​இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளார். 200 மீட்​டர் ஓட்​டப்​பந்தய வீராங்​கனை ஹரிதா பத்​ரா, 400 மீட்​டர் ஓட்​டப்​பந்தய வீராங்​கனை கிரண் பாஹல், போல்​வால்ட் வீராங்​கனை சிந்​து ஜி, டிரிப்​பிள் ஜம்ப் வீராங்​கனை ஆஷா இளங்​கோ, வட்டு எறிதல் வீராங்​கனை சான்யா யாதவ் மற்​றும் சங்​கிலி குண்டு எறிதல் வீரர் பிர​வீன் குமார் ஆகியோர் புதி​தாகச் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

கடந்த ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் இரண்டு பதக்​கங்​களை வென்ற அவி​னாஷ் சேபிள் 5 ஆயிரம் மீட்​டர் ஓட்​டப்​பந்​த​யத்​தி​லும் பங்​கேற்க அனு​ம​திக்க வேண்​டும் என்று இந்​திய தடகள கூட்டமைப்பு போட்டி அமைப்​பாளர்​களிடம் கோரிக்கை விடுத்துள்​ளது. இருப்​பினும், அவருக்கு விருப்​ப​மான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்​சேஸ் போட்​டி​யில் பங்​கேற்​பது உறுதி செய்​யப்​பட்டுள்​ளது. அதேவேளை​யில் குல்​வீர் சிங், பாரூல் சவுத்ரி ஆகியோர் தலா மூன்று போட்​டிகளில் பங்​கேற்​க​வுள்​ளனர்.

குல்​வீர் 10,000 மீட்​டர், 5,000 மீட்​டர் மற்​றும் 1,500 மீட்​டர் ஓட்​டப்​பந்தயங்​களி​லும், பாரூல் 3,000 மீட்​டர் ஸ்டீபிள்​சேஸ், 5,000 மீட்​டர் மற்​றும் 1,500 மீட்​டர் ஓட்​டப்​பந்​த​யங்​களி​லும்​ போட்டியிடுகின்றனர்.

ஆசிய விளையாட்டு போட்டியில் நீரஜ் சோப்ராவுக்கு பதிலாக யஷ்வீர்
இந்தியா, ஈரான் இடையே வர்த்தக பேச்சு நடைபெறவில்லை: அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in