

புதுடெல்லி: 5-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 தொடர் வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி 14-ம் முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும் இந்த தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் வரும் அக்டோபர் 28-ல் கொச்சியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் போட்டி நடைபெறும் நகரத்தை பிசிசிஐ அறிவிக்கவில்லை.
தொடரில் கலந்து கொள்ளும் 5 அணிகளும் வரும் 28-ம் தேதிக்குள் தக்கவைக்கும் வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற டபிள்யூபிஎல் தொடரை ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி வென்றிருந்தது.