உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை அனஹத் சிங் சாம்பியன்

உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை அனஹத் சிங் சாம்பியன்
Updated on
1 min read

புதுடெல்லி: உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்​டி​யின் மகளிர் ஒற்றையர் பிரி​வில் இந்திய வீராங்கனை அனஹத் சிங் சாம்பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​துள்​ளார். கனடா​வின் ஒன்டாரியோ நகரில் உலக ஸ்கு​வாஷ் ஜூனியர் தனி​நபர் சாம்பியன்​ஷிப் போட்டி நடை​பெற்று வரு​கிறது.

இதில் நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் பிரிவு இறு​திச்​சுற்றில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், எகிப்து நாட்டு வீராங்​கனை ருக்கையா சலே​முடன் மோதி​னார். இந்​தப் போட்​டி​யில் அனஹத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று முதல் முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்று வரலாறு படைத்​தார்.

முன்​ன​தாக, இந்​தி​யா​வின் ஜோஷ்னா சின்​னப்பா கடந்த 2005-ம் ஆண்​டில் நடை​பெற்ற உலக ஜூனியர் ஸ்கு​வாஷ் இறுதிப்போட்டிக்கு முன்​னேறி இருந்​ததே சாதனை​யாக இருந்​தது. தற்​போது இந்தப் போட்​டி​யில் அனஹத் சிங் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்​துள்​ளார். கடந்த ஆண்டு இங்கு நடந்த உலக ஜூனியர் ஸ்கு​வாஷ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் அனஹத் சின் வெண்​கலப் பதக்​கம் வென்​றார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் எகிப்து நாட்டை சேர்ந்த வீராங்​க​னை​கள் மட்​டுமே இந்த தொடரில் பட்​டம் வென்று வந்​தனர். அதனை இப்​போது அனஹத் சிங் தகர்த்​துள்​ளார்.

பிரதமர் புகழாரம்

வரலாற்று சாதனை படைத்த இந்​திய வீராங்​கனை அனஹத் சிங்குக்கு பிரதமர் நரேந்​திர மோடி புகழாரம் சூட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக தனது எக்ஸ் பக்​கத்​தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: உலக ஜூனியர் ஸ்கு​வாஷில் பட்​டம் வென்ற அனஹத் சிங்​குக்கு எனது வாழ்த்​துக்​கள். இளம் தலை​முறை​யினர் இடையே ஸ்கு​வாஷ் விளை​யாட்டு மீதான ஆர்​வத்தை அதி​கரிக்​க​வும், அவர்​கள் சாதனை​களை படைக்​க​வும் அனஹத்​தின் இந்த வெற்றி மிகப்​பெரிய உந்​துதலாக அமை​யும். இவ்​வாறு பிரதமர் மோடி அதில் குறிப்​பிட்​டுள்​ளார்.

மத்​திய அமைச்​சர் பாராட்டு

அனஹத் சிங்​குக்கு மத்​திய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் மன்சுக் மாண்​ட​வியா பாராட்டு தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்​கத்​தில் மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா கூறி​யிருப்​ப​தாவது: வரலாறு படைத்​துள்ள இந்​திய வீராங்​கனை அனஹத் சிங்​குக்கு வாழ்த்​துக்​கள்​. இந்​த அற்​புத​மான சாதனை ஒவ்​வொரு இந்​தி​யருக்​கும் பெருமை​யான தருண​மாக உள்​ளது. இவ்வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை அனஹத் சிங் சாம்பியன்
காமன்வெல்த் 2026: பளுதூக்குதலில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்றார் மீராபாய் சானு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in