உலக பாட்மிண்டன் போட்டி: நம்பர் 1 வீரரை வீழ்த்தினார் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி

உலக பாட்மிண்டன் போட்டி: நம்பர் 1 வீரரை வீழ்த்தினார் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி
Updated on
1 min read

புதுடெல்லி: உலக பாட்​மிண்​டன் போட்​டி டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரி​வில், தரவரிசை​யில் முதலிடத்​தில் உள்ள சீனா​வின் ஷி யூ கி, இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டியுடன் மோதினார்.

இதில் அபார​மாக விளை​யாடிய ஆயுஷ் ஷெட்டி 21-14, 13-21, 21-19 என்ற கணக்​கில் ஷி யூ கியூவை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

முன்​ன​தாக நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​திய வீராங்​கனை பி.​வி. சிந்​து​வும், அயர்​லாந்​தின் சோபியா நோபிளும் மோதினர். இதில் பி.​வி. சிந்து 21-7, 21-11 என்ற செட் கணக்​கில் எளி​தாக வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மகளிர் இரட்​டையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-9, 21-13 என்ற செட் கணக்​கில் ஸ்பெ​யினின் பவுலா லோபஸ், லூசியா ரோட்​ரிக்ஸ் ஜோடியைத் தோற்​கடித்​தது.

உலக பாட்மிண்டன் போட்டி: நம்பர் 1 வீரரை வீழ்த்தினார் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி
மானவ் சுதார், ஜடேஜா அசத்தல் பந்துவீச்சு: இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in