மானவ் சுதார், ஜடேஜா அசத்தல் பந்துவீச்சு: இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

மானவ் சுதார், ஜடேஜா அசத்தல் பந்துவீச்சு: இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
Updated on
2 min read

காலே: இலங்கை - இந்​தியா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்​வ​தேச மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 116 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 460 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக தேவ்​தத் படிக்​கல் 167, கே.எல்.ராகுல் 82, துருவ் ஜூரெல் 51 ரன்​கள் சேர்த்​தனர்.

குல்​தீப் யாதவ் 12, பிரசித் கிருஷ்ணா 1 ரன்னுடன் களத்​தில் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டம் நடை​பெற்​றது. மேற்​கொண்டு 2 ரன்​கள் மட்​டுமே சேர்த்த நிலை​யில் இந்​திய அணி தனது கடைசி விக்​கெட்டை இழந்​தது. பிரசித் கிருஷ்ணா 2 ரன்​களில் அசிதா பெர்​னாண்டோ பந்​தில் விக்​கெட் கீப்​பர் நிரோஷன் திக்​வெல்​லா​விடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார்.

முடி​வில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 116.4 ஓவர்​களில் 462 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இலங்கை அணி தரப்​பில் பிர​பாத் ஜெயசூரியா 4, கேஷரா நுவந்தா 3, அசிதா பெர்​னாண்டோ 2 விகெட்​களை வீழ்த்​தினர். இதையடுத்து பேட் செய்ய தொடங்​கிய இலங்கை அணி சீரான இடைவெளி​யில் விக்​கெட்​களை பறிகொடுத்​தது.

முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்​திலேயே நிஷான் மதுஷ்கா பெர்​னாண்டோ ரன் ஏதும் எடுக்​காமல் முதல் சிலிப் திசை​யில் நின்ற தேவ்​தத் படிக்​கலிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். இதையடுத்து களமிறங்​கிய தினேஷ் சந்​தி​மால் 4 ரன்​கள் எடுத்த நிலை​யில் மானவ் சுதார் பந்​தில் விக்​கெட் கீப்​பர் ரிஷப் பந்த்​திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்​டி​னார்.

நிதான​மாக விளை​யாடிய தொடக்க வீர​ரான லகிரு உதரா 44 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 27 ரன்​கள் எடுத்த நிலை​யில் மானவ் சுதார் பந்​தில் பேக்​வேர்டு பாயின்ட் திசை​யில் நின்ற யஷஸ்வி ஜெய்​ஸ்​வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

இதைத் தொடர்ந்து கமிந்து மெண்​டிஸ் 14ரன்​கள் எடுத்த நிலை​யில் குல்​தீப் யாதவ் பந்தை எக்​ஸ்​டிரா கவர் திசை​யில் அடித்த போது கேப்​டன் ஷுப்​மன் கில் இடதுபுறம் பாய்ந்து ஒற்றை கையால் அற்​புத​மாக கேட்ச் செய்​தார்.

கேப்​டன் தனஞ்​ஜெயா டி சில்வா 41 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 21 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரவீந்​திர ஜடேஜா பந்​தில் சிலிப் திசை​யில் நின்ற கே.எல்​.​ராகுலிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். 26.1 ஓவர்​களில் 90 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் சோனல் தினுஷாவுடன் இணைந்த விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான நிரோஷன் திக்​வெல்லா சீராக ரன்​கள் சேர்த்து பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்​தார்.

நிரோஷன் திக்​வெல்லா 67 பந்​துகளில் தனது 23-வது அரை சதத்தை கடந்​தார். 6-வது விக்​கெட்​டுக்கு 217 பந்​துகளில், 146 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை பிரசித் கிருஷ்ணா பிரித்​தார். நிரோஷன் திக்​வெல்லா 115 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 80 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் ரிஷப் பந்த்​திடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய கேஷரா நுவந்தா 18 பந்​துகளில், 2 ரன்களு​டன் 18 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரவீந்​திர ஜடேஜா பந்தை சிலி பாயின்ட் திசை​யில் அடித்​தார். அப்​போது அங்கு பீல்​டிங் நின்ற யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் தொடை பகு​தி​யில் பட்டு காற்​றில் பறந்த பந்தை ஷுப்​மன் கில் கேட்ச் செய்​தார். சர்​வ​தேச டெஸ்ட் அரங்​கில் ஜடேஜா கைப்​பற்​றிய 350-வது விக்​கெட்​டாக இது அமைந்​தது.

இதையடுத்து களமிறங்​கிய பிர​பாத் ஜெயசூரியா 10 ரன்​களில் வெளி​யேறி​னார். சிறப்​பாக விளை​யாடிய சோனல் தினுஷா 167 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் தனது முதல் சதத்தை விளாசி​னார். அவரது பொறுப்​பான ஆட்​டத்​தால் இலங்கை பாலோ-ஆன் பெறு​வ​தில் இருந்து தப்​பித்​தது.

அச்​சுறுத்​தலாக திகழ்ந்த சோனல் தினுஷாவை ரவீந்​திர ஜடேஜா எல்​பிடபிள்யூ முறை​யில் அவுட்​டாக்​கி​னார். 168 பந்​துகளை சந்​தித்த சோனல் தினுஷா 100 ரன்​கள் சேர்த்​தார். இதன்​பின்​னர் லகிரு குமரா 10 ரன்​களில் மானவ் சுதார் பந்​தில் ஸ்டெம்​பிங்க் ஆனார். முடி​வில் இலங்கை அணி 79.4 ஓவர்​களில் 284 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இந்​திய அணி தரப்​பில் மானவ் சுதார் 4, ரவீந்​திர ஜடேஜா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்​தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்பற்​றினர்.

இலங்கை அணி முதல் இன்​னிங்​ஸில் ஆட்​ட​மிழந்​ததும் 3-வது நாள் ஆட்​டம் முடிவுக்கு வந்​தது. 178 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்​ள இந்​தி​ய அணி 4-வது நாளான இன்​று 2-வது இன்​னிங்​ஸை விளை​யாட உள்ளது.

20 ரன்னில் தப்பித்த திக்வெல்லா

நிரோஷன் திக்வெல்லா 20 ரன்களில் இருந்த போது மானவ் சுதார் பந்தில் சிலிப் திசையில் கொடுத்த கேட்ச்சை கே.எல்.ராகுல் தவறவிட்டார். இதற்கான பலனை இந்திய அணி அனுபவித்தது. ஏனெனில் சோனல் தினுஷாவுடன் இணைந்து நிரோஷன் திக்வெல்லா 6-வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்து அசத்தினார். தனது முதல் சதத்தை நெருங்கிய நிலையில் திக்வெல்லா 80 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் பெருமூச்சு விட்டனர்.

மானவ் சுதார், ஜடேஜா அசத்தல் பந்துவீச்சு: இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
பொறி​யியல் சேர்க்கை 88,930 பேருக்கு ஒதுக்​கீடு ஆணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in