தலைமை பயிற்சி​யாள​ராக ஹரேந்​திரா சிங்

தலைமை பயிற்சி​யாள​ராக ஹரேந்​திரா சிங்

மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ராஜினாமா

Published on

புதுடெல்லி: இந்​திய மகளிர் ஹாக்கி அணி​யின் தலைமை பயிற்சி​யாள​ராக ஹரேந்​திரா சிங் செயல்​பட்டு வந்​தார். இந்நிலையில் அவர், திடீரென தனது பதவியை ராஜி​னாமா செய்துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர், ஹாக்கி இந்​தி​யா​வுக்கு மின்​னஞ்​சல் அனுப்பி​யுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. சொந்த காரணங்களுக்​காக ஹரேந்​திரா சிங் விலகி உள்​ள​தாக கூறப்படுகிறது. அமெரிக்க ஆடவர் ஹாக்கி அணிக்கு பயிற்​சி​யாள​ராக செயல்பட்ட ஹரேந்​திரா சிங்கை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் இந்திய மகளிர் ஹாக்கி அணி​யின் தலைமை பயிற்சியாளராக ஹாக்கி இந்​தியா நியமித்​தது. அவரது பயிற்சியின் கீழ் இந்​திய மகளிர் ஹாக்கி கடந்த ஓராண்டு காலமாக சிறந்த செயல் திறனை வெளிப்​படுத்​த​வில்​லை.

சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனம் சார்​பில் நடத்​தப்​பட்டு வரும் புரோ ஹாக்கி லீக்​கில் இந்​திய மகளிர் அணி 16 ஆட்​டங்​களில் விளையாடி இரண்​டில் மட்​டுமே வெற்றி பெற்​றது. மேலும் அடுத்த சீசனுக்கு தகுதி பெற​வும் தவறியது. இதன் காரண​மாக ஏற்​பட்ட நெருக்​கடி​யால் ஹரேந்​திரா சிங் வில​கிய​தாக​வும் கூறப்​படு​கிறது. புதிய பயிற்​சி​யாள​ராக நெதர்​லாந்​தின் ஸ்ஜோர்ட் மரிஜ்னே நியமிக்​கப்​படக்​கூடும் என தெரி​கிறது.

அவரது பயிற்​சி​யின் கீழ் இந்​திய மகளிர் அணி 2021ம் ஆண்டு நடை​பெற்ற டோக்​கியோ ஒலிம்​பிக்​கில் 4-வது இடம் பிடித்து இருந்தது. அவர், 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்​திய மகளிர் ஹாக்கி அணி​யின் பயிற்​சி​யாளர் பத​வி​யில் இருந்​து விலகியிருந்தார்​.

<div class="paragraphs"><p>தலைமை பயிற்சி​யாள​ராக ஹரேந்​திரா சிங்</p></div>
“என்னுடைய கிரிக்கெட் முழு​வதும் மனரீதியிலானது” - மனம் திறக்கும் விராட் கோலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in