சென்​னை​யில் இன்று முதல் மகளிர் டென்​னிஸ்

சென்​னை​யில் இன்று முதல் மகளிர் டென்​னிஸ்
Updated on: 
1 min read

சென்னை: சென்​னை​யில் இன்று (நவம்​பர் 2) முதல் நவம்​பர் 8-ம் தேதி வரை சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி நடை​பெறவுள்​ளது.

சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்டிஏடி டென்​னிஸ் மைதானத்​தில் இப்​போட்​டிகள் நடை​பெறும். இந்​தப் போட்​டி​யில் வைல்டு கார்டு(நேரடி தகுதி) மூலம் இந்​திய வீராங்​க​னைகள் வைஷ்ணவி அத்​கர், சஹாஜா யமலபள்ளி, மாயா ராஜேஸ்வரன் ரேவதி ஆகியோர் களமிறங்க உள்​ளனர்.

இந்​தப் போட்​டி​யில் இந்​தோ​னேசிய வீராங்​கனை ஜானிஸ் டிஜென் முதல் நிலை வீராங்​க​னையாகவும், ஆஸ்தி​ரிய வீராங்​கனை லில்லி டாகர் 2-ம் நிலை வீராங்​க​னையாகவும் களமிறங்க உள்​ளனர்.

இந்த சென்னை ஓபன் மகளிர் டென்​னிஸ் போட்டி கடைசி ஆண்​டாக இம்​முறை சென்​னை​யில் நடை​பெறவுள்​ளது. இதன்​பிறகு இந்​தப் போட்டி பிலிப்​பைன்​ஸுக்கு மாற்​றப்​பட​வுள்​ளது.

கடந்த ஆண்டு சென்​னை​யில் நடை​பெற்ற மகளிர் டென்​னிஸ் போட்​டி​யில் ஆஸ்தி​ரிய வீராங்​கனை கிம்​பர்லி பிரில்லை 6-4, 6-3 என்ற செட் கணக்​கில் வீழ்த்தி தனது முதல் டபிள்​யூடிஏ ஒற்​றையர் பட்​டத்தை இந்​தோ​னேசிய வீராங்​கனை ஜானிஸ் டிஜென் வென்​றார். அவர் இந்த ஆண்​டும் சென்​னை​யில் களம் காண்​கிறார். இதையடுத்து பட்​டத்​தைத் தக்​கவைத்​துக் கொள்ள அவர் கடுமையாக போராடுவார் என எதிர்​பார்க்​கலாம்.

சென்​னை​யில் இன்று முதல் மகளிர் டென்​னிஸ்
ஹைலோ ஓபன் பாட்​மிண்​டன்: பி.வி.சிந்துவுக்கு கோப்பை

X