நியூஸிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்பினார் வில்லியம்சன்

நியூஸிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்பினார் வில்லியம்சன்
Updated on
1 min read

வெலிங்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 2ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 14 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சீனியர் நட்சத்திர பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்பியுள்ளார். கடைசியாக நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரில் வில்லியம்சன் கலந்துகொள்ளாத நிலையில் தற்போது டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்: டாம் லேதம் (கேப்டன்), டாம் பிளண்டல், மைக்கேல் பிரேஸ்வெல், டேவன் கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், பிளேர் டிக்னர், வில் யங், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், மேட் ஹென்றி, ஸாக் போக்ஸ், ஜேக்கப் டஃபி, நேதன் ஸ்மித்.

நியூஸிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்பினார் வில்லியம்சன்
மார்கோ வேகத்தில் 201 ரன்களில் சுருண்டது இந்திய அணி - 314 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in