ஆர்சிபி அணியின் ரன் வேட்டை தொடருமா? - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று பலப்பரீட்சை

ஆர்சிபி அணியின் ரன் வேட்டை தொடருமா? - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று பலப்பரீட்சை
Updated on
2 min read

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்​களூரு எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்சிபி) - லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 6 புள்​ளி​கள் பெற்றுபட்​டியலில் 3-வது இடத்தில் உள்​ளது. கடைசி​யாக அந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து இருந்​தது. பேட்​டிங்​கில் டாப் 5-ல் களமிறங்​கும் வீரர்கள் தங்​களது அதிரடி​யால் பலம் சேர்த்து வருகின்றனர். விராட் கோலி 162, பில் சால்ட் 178, ரஜத் பட்டிதார் 214, டிம் டேவிட் 221, தேவ்​தத் படிக்​கல் 201 ரன்​கள் விளாசி சிறந்த பார்​மில் உள்​ளனர்.

இவர்​கள் 4 ஆட்​டங்​களில் கூட்​டாக 52 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டுள்​ளனர். நடப்பு சீசனில் இந்த அளவுக்கு எந்த அணி​களும் சிக்​ஸர்​களை விளாச​வில்​லை. இதன் விளை​வாக, இந்த ஐபிஎல் தொடரில் இது​வரை அந்த அணி 200 ரன்​களுக்​குக் குறை​வாக எடுத்​ததே இல்​லை. இன்று லக்னோ அணிக்கு எதி​ராக மோதும் ஆர்​சிபி அணி இதன் தொடர்ச்​சி​யாக சொந்த மைதானத்​தில் வரும் 18-ம் தேதி டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யுட​னும், 24-ம் தேதி குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யுட​னும் மோதுகிறது.

இதனால் அடுத்​தடுத்து வெற்​றிகளை குவிப்​ப​தில் ஆர்​சிபி அணி கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். எனினும் சின்​ன​சாமி மைதானத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் பந்​து​வீச்​சுக்கு எதி​ராக ஆர்​சிபி அணி​யின் ஆதிக்​கம் தொடரு​மா? என்ற கேள்​வி​யும் எழுகிறது. ஏனெனில் லக்னோ அணி​யில் அனுபவம் வாய்ந்த முகமது ஷமி உள்​ளனர். அவருடன் வேகப்​பந்து வீச்​சில் பிரின்ஸ் யாத​வும் சுழலில் திக்​வேஷ் ராதி​யும் நம்​பிக்கை அளிக்கக்கூடியவர்கள்.

இந்த பந்​து​வீச்சு கூட்​டணி நடப்பு தொடரில் எதிரணி​களை வெகு​வாகக் கட்​டுப்​படுத்தி அனை​வரை​யும் ஈர்க்​கக்​கூடிய வகை​யில் செயல்பட்டு வரு​கிறது. முகமது ஷமி ஓவருக்கு சராசரி​யாக 6.2 ரன்​களையே விட்​டுக்​கொடுத்​துள்​ளார். நடப்பு தொடரில் இதுவே மிகச்​சிறந்​த​தாக உள்​ளது. இருப்​பினும், பெங்​களூரு​வின் தட்​டை​யான ஆடு​களத்​தில் ஆர்​சிபி பேட்​டர்​களுக்கு எதி​ராக இந்த மூவர் கூட்​ட​ணி​யும் ஒவ்​வொரு பந்​தை​யும் மிகத் துல்​லிய​மாக வீச வேண்​டியது அவசி​யம்.

பந்​து​வீச்​சாளர்​கள் சிறந்த முயற்​சிகளை மேற்​கொண்டு வரும்​போ​தி​லும், லக்னோ அணி புள்​ளிப்​பட்​டியலில் 7-வது இடத்​தில்​தான் உள்​ளது. இதற்கு முக்​கியக் காரணம், அந்த அணி​யின் பேட்​ஸ்​மேன்​கள் உத்​வேகம் இன்றி மந்​த​மாக விளை​யாடி வரு​வது​தான். லக்னோ அணி இது​வரை 4 ஆட்​டங்​களில் விளையாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களுடன் 4 புள்ளிகளை பெற்​றுள்​ளது.

ரிஷப் பந்த் தலை​மையி​லான லக்னோ அணி​யின் பேட்​டிங் வரிசை இன்​னும் முழு​மை​யான ஃபார்​மிற்கு வரவில்​லை. கேப்​டனின் தற்​போதைய ஃபார்மே அதைத் தெளி​வாக உணர்த்​துகிறது. 4 போட்​டிகளில் விளை​யாடி உள்ள ரிஷப் பந்த் 130 ஸ்ட்​ரைக்​ரேட்​டில் வெறும் 103 ரன்​கள் மட்​டுமே எடுத்​துள்​ளார். மிட்​செல் மார்​ஷ், எய்​டன் மார்க்​ரம், நிக்​கோலஸ் பூரன் போன்ற நட்​சத்​திர வீரர்​களும், ஆயுஷ் பதோனி மற்​றும் அப்​துல் சமத் போன்ற இளம் வீரர்​களும் ரன் குவிக்க முடி​யாமல் திணறி வரு​கின்​றனர்.

கொல்​கத்தா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் முகுல் சவுத்ரி அதிரடி​யாக விளை​யாடி வெற்றி தேடிக் கொடுத்​திருந்​தார். ஆனால் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்கு எதி​ராக கடைசி​யாக விளை​யாடி ஆட்​டத்​தில் முகுல் சவுத்ரி 14 பந்​துகளில் 18 ரன்​கள் மட்​டுமே சேர்த்து ஏமாற்​றம் அளித்​தார். அணியின் வெற்​றிக்கு உதவவேண்​டுமெனில் அவர்​ சீரான வேகத்​தில்​ ரன்​களைக்​ குவிக்​க வேண்​டியது அவசியம்.

ஆர்சிபி அணியின் ரன் வேட்டை தொடருமா? - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று பலப்பரீட்சை
சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது வெற்றி - ஹைலைட்ஸ் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in