இந்திய அணியில் கில், ஜெய்ஸ்வால், ஜிதேஷுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன்? @ டி20 உலகக் கோப்பை

இந்திய அணியில் கில், ஜெய்ஸ்வால், ஜிதேஷுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன்? @ டி20 உலகக் கோப்பை
Updated on
1 min read

மும்பை: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்கள் அணியில் இடம்பெறாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடரில் நடப்பு சாம்பியன் என்ற அடையாளத்துடன் இந்தியா களம் காண்கிறது.

ஷுப்மன் கில்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இதில் இடம்பெறாமல் போனது பெரிய சர்ப்ரைஸாக பலருக்கும் அமைந்தது. டி20 அணியின் துணை கேப்டனாக அவர் விளையாடி வந்தார். சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அவர் தொடக்க ஆட்டக்காரராக அவர் விளையாடினார். 2024-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த செப்டம்பரில் மீண்டும் டி20 அணியில் அவர் இடம்பெற்றார். அது முதல் 15 இன்னிங்ஸ் ஆடி, 291 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், அவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.

அவர் அணியில் இடம்பெறாத நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார். மற்றொரு விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் சஞ்சு சாம்சனுக்கு சரியான மாற்றாக பார்க்கப்படுகிறது. அண்மை காலமாக உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிதேஷ் சர்மா: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தொடக்க ஆட்டக்காரராக இருக்க வேண்டுமென விரும்பிய காரணத்தால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா, டி20 உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு பெறவில்லை. இவர் பின்வரிசையில் இணைந்து அதிரடியாக ஆடும் திறன் கொண்டவர். அதேநேரத்தில் அணியில் பினிஷராக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் தேர்வாக வாஷிங்டன் சுந்தர் உள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்: டாப் ஆர்டரில் சிறப்பாக ஆடும் திறன் கொண்டவர் ஜெய்ஸ்வால். அதில் துளியும் சந்தேகம் இல்லை. இருப்பினும் அபிஷேக் சர்மாவின் வருகை காரணமாக இந்திய டி20 அணியில் ஜெய்ஸ்வாலுக்கான வாய்ப்பு மங்கிவிட்டது. மீண்டும் டாப் ஆர்டரில் ஆடும் திறன் கொண்ட மாற்று வீரராக ஜெய்ஸ்வால் பார்க்கப்படுகிறார்.

இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்).

இந்திய அணியில் கில், ஜெய்ஸ்வால், ஜிதேஷுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன்? @ டி20 உலகக் கோப்பை
போலீ​ஸாக மீண்​டும் சூர்யா: இணை​யத்​தில் கசிந்​தது படப்​பிடிப்பு புகைப்​படம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in