

சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார். இந்தப்படம் அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடித்துள்ளார்.
இந்நிலையில், தனது 47-வது படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். இதை ‘ஆவேஷம்’ படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்குகிறார்.
இதில் நஸ்ரியா, ‘பிரேமலு’ நஸ்லென் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் படமான இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
பெரும் கூட்டத்துக்கு இடையே போலீஸ் உடையில் அவர் நிற்பது போன்ற அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.