ஒருநாள் தொடரை வெல்வது யார்? - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

ஒருநாள் தொடரை வெல்வது யார்? - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
Updated on
2 min read

விசாகப்பட்டினம்: இந்​தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி விசாகப்​பட்​டினத்​தில் இன்று பிற்​பகல் 1.30 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்​லும். இதனால் ரசிகர்​கள் மத்​தி​யில் இந்த போட்டி மிகுந்த எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

இரு அணி​கள் இடையே ராஞ்​சி​யில் நடை​பெற்ற முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 17 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. தொடர்ந்து ராய்ப்​பூரில் நடை​பெற்ற 2-வது ஒரு​நாள் போட்​டி​யில் 359 ரன்​கள் இலக்கை விரட்​டிய தென் ஆப்​பிரிக்க அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதன் மூலம் தொடர் 1-1 என சமநிலையை அடைந்​தது.

இந்​நிலை​யில் தொடரை வெல்​வது யார்? என்​பதை தீர்​மானிக்​கும் வகை​யில் அமைந்​துள்ள 3-வது மற்​றும் கடைசி ஒரு​நாள் போட்டி விசாகப்​பட்​டினத்​தில் இன்று நடை​பெறுகிறது.

வழக்​க​மாக இந்​திய அணி​யில் சீனியர் வீரர்​களுக்​கு​தான் நெருக்​கடி உரு​வாகும். ஆனால் இம்​முறை இளம் வீரர்​களுக்கு அழுத்​தம் உரு​வாகி உள்​ளது. 2-வது ஒரு​நாள் போட்​டி​யில் இந்​திய அணி 358 ரன்​களை குவித்த போதி​லும் வெற்​றியை வசப்​படுத்த முடி​யாமல் போனது. எய்​டன் மார்க்​ரம், டெவால்ட் பிரே​விஸ், மேத்யூ ப்ரீட்​ஸ்கே ஆகியோர் இந்​திய பந்​து​வீச்​சுக்கு எதி​ராக சரள​மாக ரன்​கள் சேர்த்​தனர்.

இதற்கு பிரசித் கிருஷ்ணா, அர்​ஷ்தீப் சிங், ஹர்​ஷித் ராணா, குல்​தீப் யாதவ், ரவீந்​திர ஜடேஜா ஆகியோரிடம் இருந்து தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறன் வெளிப்​ப​டாததே காரணம். அதேவேளை​யில் ஆல்​ர​வுண்​ட​ராக வாஷிங்​டன் சுந்​தரும் சிறப்​பான செயல் திறனை வெளிப்​படுத்​த​வில்​லை. இன்​றைய ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி​யின் பேட்​டிங் வரிசையை கட்​டுப்​படுத்​தி​னால் மட்​டுமே தொடரை வெல்​வதற்​கான வாய்ப்பு கைகூடும்.

பேட்​டிங்​கில் விராட் கோலி அசுர பார்​மில் உள்​ளார். தொடர்ச்​சி​யாக இரு சதஙக்ள் விளாசி உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்​னிங்ஸ் வெளிப்​படக்​கூடும். இதே​போன்று கடந்த ஆட்​டத்​தில் அதிரடி​யாக விளை​யாடி சதம் விளாசிய ருது​ராஜ் கெய்க்​வாட்​டும் மீண்​டும் ஒரு ரன்​வேட்​டை​யில் ஈடுபட முயற்​சிக்​கக்​கூடும். அதேவேளை​யில் ரோஹித் சர்​மா​வும் தனது பங்​களிப்பை வழங்​கு​வ​தில் முனைப்பு காட்​டக்​கூடும்.

மற்​றொரு தொடக்க வீர​ரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் இரு ஆட்​டங்​களி​லும் முறை 18, 22 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். விரை​வாக ரன்​கள் சேர்க்க வேண்​டும் என்று முனைப்​புடன் செயல்​பட்டு விக்​கெட்டை பறி​கொடுப்​பதை ஜெய்​ஸ்​வால் வாடிக்​கை​யாக கொண்​டுள்​ளார். மேலும் இடதுகை வேகப்​பந்து வீச்​சாளர்​களுக்கு எதி​ராக தடு​மாறி வரு​கிறார். அனைத்து வடிவி​லான போட்​டிகளி​லும் ஜெய்​ஸ்​வால் இடதுகை வேகப்​பந்து வீச்​சாளர்​களுக்கு எதி​ராக 30 முறை ஆட்​ட​மிழந்​துள்​ளார். இதற்​கான தீர்வை அவர், கண்​டு​பிடிக்க முயற்​சிக்​கக்​கூடும்.

கடந்த ஆட்​டத்​தில் இந்​திய 40 ஓவர்​கள் வரை ரன்​கள் வேட்​டை​யாடியது. ஆனால் கடைசி 10 ஓவர்​களில் 74 ரன்​கள் மட்​டுமே சேர்த்​தது. ரவீந்​திர ஜடேஜா மந்​த​மாக விளை​யடி 27 பந்​துகளில் 24 ரன்​கள் மட்​டுமே எடுத்​தது ஆட்​டத்​தின் முடி​வில் பெரிய பாதிப்பை ஏற்​படுத்தி இருந்​தது. ஏனெனில் பனிப்​பொழி​வால் தென் ஆப்​பிரிக்க வீரர்​கள் இலக்கை எந்​த​வித சிரமமும் இல்​லாமல் எளி​தாக விரட்​டினர். இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி முதலில் பேட் செய்​யும் பட்​சத்​தில் கூடு​தலாக ரன்​களை குவிப்​ப​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி​யில் ஒரு சில மாற்​றங்​கள் இருக்​கக்​கூடும். நடு​வரிசை​யில் பேட்​டிங்கை பலப்​படுத்​தும் வகை​யில் வாஷிங்​டன் சுந்​தருக்கு பதிலாக திலக் வர்மா அல்​லது ரிஷப் பந்த் களமிறக்​கப்பட வாய்ப்பு உள்​ளது.

தென் ஆப்​பிரிக்க அணி கடந்த ஆட்​டத்​தில் பெற்ற வெற்​றி​யால் உற்​சாகத்​துடன் களமிறங்​கு​கிறது. பேட்​டிங்​கில் எய்​டன் மார்க்​ரமின் வலு​வான தொடக்​கம், கேப்​டன் தெம்பா பவு​மா​வின் நிதான​மான ஆட்​டம், நடு​வரிசை​யில் மேத்யூ ப்ரீட்​ஸ்​கே​வின் சீரான ரன் குவிப்​பு, டெவால்ட் பிரே​விஸின் அதிரடி ஆகியவை பலம் சேர்க்​கிறது.

பின்​வரிசை​யில் மார்கோ யான்​சன், கார்​பின் போஷ் ஆகியோ​ரும் அதிரடி​யில் மிரட்​டக்​கூடிய​வர்​களாக தி​கழ்​கின்​றனர். கடந்த ஆட்​டத்​தில் கா​யம் அடைந்த நந்த்ரே பர்​கர்​, டோனி டி ஸோர்​ஸி ஆகியோர் இன்​றைய ஆட்​டத்​தில்​ களமிறங்​குவது சந்​தேகம்தான்.

ஒருநாள் தொடரை வெல்வது யார்? - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in