

சென்னை: வரும் 28-ம் தேதி ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி உடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை மேற்கொள்கிறது. இந்நிலையில், காயம் காரணமாக இந்த சீசனை முழுவதுமாகவும், பகுதி அளவிலும் மிஸ் செய்யும் வீரர்கள் யார், யார் என்பதை பார்ப்போம்.
10 ஐபிஎல் அணிகளில் சில அணிகளின் பிரதான வீரர்கள் பலர் இந்த பட்டியலில் உள்ளனர். கம்மின்ஸ், ஹேசில்வுட், ஸ்டார்க் உள்ளிட்டோர் இந்த சீசனில் தொடக்க சில போட்டிகளை தவறவிடுகின்றனர். இதனால் ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட அணிகள் சற்று பின்னடைவை சந்திக்கின்றன. இதில் ஹர்ஷித் ராணா, நாதன் எல்லிஸ், சாம் கரன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக ஐபிஎல் 2026 சீசனை முழுவதுமாகவும், பகுதி அளவிலும் மிஸ் செய்யும் வீரர்கள்:
> நேதன் எல்லிஸ் - சிஎஸ்கே: சீசன் முழுவதும் விளையாடமாட்டார்
> மிட்செல் ஸ்டார்க் - டெல்லி கேப்பிடல்ஸ்: பணிச்சுமை காரணமாக சீசனின் தொடக்க சில போட்டிகளில் பங்கேற்கவில்லை
> ஹர்ஷித் ராணா - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சீசன் முழுவதும் விளையாடமாட்டார்
> பதிரனா - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: காயம் காரணமாக சீசனி பகுதி அளவில் தவறவிடுகிறார்
> ஜோஷ் இங்கிலிஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: திருமணம் காரணமாக விடுப்பில் செல்வதால் பகுதி அளவில் சீசனை தவறவிடுவதாக தகவல்
> அதர்வா அன்கோல்கர் - மும்பை இந்தியன்ஸ்: முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சீசன் முழுவதும் விளையாடவில்லை
> ஃபெர்குசன் - பஞ்சாப் கிங்ஸ்: விடுப்பில் செல்வதால் பகுதி அளவில் சீசனை தவறவிடுகிறார்
> சாம் கரன் - ராஜஸ்தான் ராயல்ஸ்: காயம் காரணமாக சீசனில் விளையாடவில்லை
> ஹேசில்வுட் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: காயம் காரணமாக இந்த சீசனில் முதல் சில ஆட்டங்களில் பங்கேற்கவில்லை
> பாட் கம்மின்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: காயத்தால் முதல் சில ஆட்டங்களில் விளையாடவில்லை