இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டெஸ்ட் தொடர் எப்போது? - முழு விவரம்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டெஸ்ட் தொடர் எப்போது? - முழு விவரம்
Updated on
1 min read

சென்னை: இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி அசத்தியுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எப்போது என்பதை பார்ப்போம்.

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனை கடந்த ஜூனில் இங்கிலாந்து நாட்டில் தொடங்கியது இந்திய கிரிக்கெட் அணி. இங்கிலாந்து அணி உடனான இந்த தொடரை பெரிய மாற்றங்களுடன் எதிர்கொண்டது இந்தியா. அனுபவ வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் ஷுப்மன் கில், அணியின் கேப்டன் ஆனார். அந்த தொடரை 2-2 என்ற கணக்கில் இந்தியா டிரா செய்தது. தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

இந்நிலையில், அண்மையில் தென் ஆப்பிரிக்க அணி உடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியது. கொல்கத்தா மற்றும் குவாஹாட்டியில் நடைபெற்ற இந்த தொடரின் இரண்டு ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்த தொடருக்கு பின்னர் வரும் 2026 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. தொடர்ந்து அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட நியூஸிலாந்துக்கு செல்கிறது. அதன் பின்னர் 2027 ஜனவரியில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டெஸ்ட் தொடர் எப்போது? - முழு விவரம்
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in