முதல் டெஸ்டில் மே.இ.தீவுகள் வெற்றி

முதல் டெஸ்டில் மே.இ.தீவுகள் வெற்றி
Updated on
1 min read

ஆன்டிகுவா: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் - இலங்கை அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி ஆன்​டிகு​வா​வில் நடை​பெற்​றது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இலங்கை அணி 308 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதேவேளை​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 626 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. அமிர் ஜாங்கூ 233 ரன்​களும், கேப்​டன் ராஸ்​டன் சேஸ் 194 ரன்​களும் விளாசினர். 318 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளையாடிய இலங்கை அணி நேற்​று முன்​தினம் நடை​பெற்ற 4-வது நாள் ஆட்​டத்​தில் 31.2 ஓவர்​களில் 101 ரன்​களுக்கு ஆட்டமிழந்தது.

அதி​கபட்ச​மாக தினேஷ் சந்​தி​மால் 43, சோனல் தினுஷா 12 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற எந்த பேட்​ஸ்​மேனும் இரட்டை இலக்க ரன்னை எட்​ட​வில்​லை. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தரப்​பில் கேமர் ரோச் 4, ஜெய்​டன் சீல்ஸ் 3, ஷமர் ஜோசப் 2, அல்​சாரி ஜோசப் ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

இன்​னிங்ஸ் மற்​றும் 217 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்​கு​கிறது.

முதல் டெஸ்டில் மே.இ.தீவுகள் வெற்றி
5 கிலோ எடை கொண்ட தங்கத்தினாலான உலகக் கோப்பையின் தற்போதைய மதிப்பு என்ன? - FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in