மேற்கு இந்தியத் தீவுகள் அணி 356 ரன்கள் குவிப்பு

மேற்கு இந்தியத் தீவுகள் அணி 356 ரன்கள் குவிப்பு
Updated on: 
1 min read

சில்ஹெட்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் - வங்​கதேசம் அணிகள் இடை​யி​லான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி சில்​ஹெட் நகரில் நடை​பெற்று வரு​கிறது. டாஸ் வென்று பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 70 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 235 ரன்​கள் எடுத்​தது.

பிரண்​டன் கிங் 9, கவேம் ஹாட்ஜ் 1, ஜோஸ்வா டி சில்வா 12, கெவின் விக்​ஹாம் 61 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். அமிர் ஜாங்கூ 111, ஜஸ்​டின் கிரீவ்ஸ் 35 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 106.4 ஓவர்​களில் 356 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அமிர் ஜாங்கூ 212 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 13 பவுண்​டரி​களு​டன் 133 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஹசன் மஹ்​மூத் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். ஜஸ்​டின் கிரீவ்ஸ் 51, கேப்​டன் ராஸ்​டன் சேஸ் 0, ஜோஸ்வா பிஷப் 23, ஜெய்​டன் சீல்ஸ் 15 ரன்​களில் வெளியேறினர். ஜோமல் வாரிக்​கன் 27 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

வங்​கதேச அணி சார்​பில் ஹசன் மஹ்​மூத் 6 விக்​கெட்​களை வீழ்த்​தினார். தஸ்​கின் அகமது, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய வங்​கதேச அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 40 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 88 ரன்​கள் எடுத்​திருந்​தது.

தன்​ஸித் ஹசன் 16, நயீம் ஹசன் 5, கேப்​டன் நஜ்​முல் ஹொசைன் ஷான்டோ 18 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். தவூஹித் ஹிர்​தோய் 29, முஸ்பிகுர் ரகிம் 19 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். கைவசம் 7 விக்​கெட்​கள் இருக்க 268 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள வங்​கதேச அணி இன்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடு​கிறது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி 356 ரன்கள் குவிப்பு
நியூஸிலாந்துடன் 2-வது போட்டியில் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி

X