நியூஸிலாந்துடன் 2-வது போட்டியில் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள். 

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள். 

Updated on: 
2 min read

வெலிங்டன்: இந்​தியா - நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான 2-வது ஒருநாள் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் உள்ள ஹென்றி மைதானத்​தில் இன்று காலை 7.30 மணிக்கு நடை​பெறுகிறது.

இரு அணிகள் இடை​யி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் ஆக்​லாந்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. இதன் வாயி​லாக தொடரில் இந்​திய அணி 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. இந்​நிலை​யில் 2-வது ஒருநாள் போட்டி வெலிங்​டனில் இன்று நடை​பெறுகிறது.

முதல் போட்​டி​யில் இந்​திய அணி​யின் இளம் வேகப்பந்து வீச்​சாளர்​கள் சிறப்​பாக செயல்​பட்டு இருந்​தனர். அதிலும் குர்​னூர் பிரார், அன்​ஷுல் கம்​போஜ் ஆகியோர் நியூஸிலாந்து அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு தங்​களது சீரான வேகம் மற்​றும் பவுன்ஸ் மூலம் கடும் நெருக்​கடி கொடுத்​தனர்.

இதில் அன்​ஷுல் கம்​போஜ் 45 டாட் பால்​களை வீசி அசத்​தி​யிருந்​தார் அர்​ஷ்​தீப் சிங்​கும் உறுதுணை​யாக செயல்​பட்​ட​தால் நியூஸிலாந்து அணியை 185 ரன்​களுக்​குள் மடக்க முடிந்​தது. அகிப் நபி விக்​கெட் வீழ்த்​த​வில்லை என்​றாலும் நேர்த்​தி​யாகவே செயல்​பட்டு இருந்​தார்.

ஆக்​லாந்து மைதானத்​தில் நேர் திசையில் உள்ள எல்​லைக்​கோடுகள் குறுகிய​தாக இருந்​தன. தற்​போது 2-வது போட்டி நடை​பெறும் ஹென்றி மைதானத்​தில் ஸ்கொயர் பகுதி எல்​லைக்​கோடுகள் குறுகிய தொலைவு கொண்​டது. இத​னால் இதற்கு தகுந்​தவாறு பந்​து​வீச்​சாளர்​கள் செயல்​பட வேண்​டியது அவ​சி​யம்.

பேட்​டிங்​கில் ஈடன் பார்க் மைதானத்​தில் விராட் கோலி​யின் அதிரடி​யான ஆட்​டம் அனைவரை​யும் கவர்ந்​தது. ஆடுகளத்​தில் இருந்த கூடுதல் பவுன்ஸ் அவரைப் பெரிதாகப் பாதிக்​க​வில்லை. இந்​திய அணி​யின் ரன் சேஸிங்​கில் அவர், 74 ரன்​களை விளாசி வெற்​றி​யில் முக்​கியப் பங்​காற்​றினார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்​டைவீச்சு வெளிப்​படக்​கூடும்.

மற்​றொரு சீனியர் நட்​சத்​திர பேட்​ஸ்மேனான ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்து இருந்​தார். இன்​றைய ஆட்​டத்​தில் ரன் குவிப்​ப​தில் அவர், கவனம் செலுத்​தக்​கூடும்.

ஆனால், இந்​திய அணி​யின் மற்ற பேட்​ஸ்​மேன்​களான ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் ஐயர், அக்​சர் படேல் உள்​ளிட்​டோர் நியூஸிலாந்து பந்​து​வீச்​சாளர்​களின் ஷார்ட் பிட்ச் பந்​துகளை எதிர்​கொள்​ளத் தடு​மாறினர். இந்த பல​வீனத்​தைச் அவர்​கள் சரிசெய்து ரன்​கள் குவிக்க முயற்​சிக்​கக்​கூடும்.

முதல் போட்​டி​யில் நியூஸிலாந்து பேட்​ஸ்​மேன்​களும் ஷார்ட் பிட்ச் பந்​துகளை புல் ஷாட் மூலம் எதிர்​கொள்ள முயன்​றனர். ஆனால், அவர்​களது முயற்​சிகள் பலனளிக்​க​வில்லை. இந்​திய வேகப்​பந்து வீச்​சாளர்​களின் பந்​துகளில் இருந்த கூடுதல் பவுன்​ஸைச் சமாளிக்க நியூஸிலாந்து பேட்​ஸ்​மேன்​கள் தடு​மாறி​யிருந்​தனர்.

இன்​றைய போட்டி நடை​பெறும் மைதானத்​திலும் பந்​துகள் நன்​றாக எழும்பி வரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இத​னால் இரு அணிகளின் வேகப்​பந்து வீச்​சாளர்​களும் முக்​கிய பங்கு வகிக்​கக்​கூடும்.

இதற்​கிடையே, பீல்​டிங் பயிற்​சி​யின்​போது ஏற்​பட்ட மோதலில் தலை​யில் காயமடைந்து மூளை​யதிர்ச்​சிக்கு உள்​ளான நியூஸிலாந்து அணி​யின் முக்​கிய பேட்​ஸ்​மேன் டெவன் கான்வே, தொடரின் எஞ்​சிய போட்​டிகளில் இருந்து வில​கி​யுள்​ளார்.

ஏற்​கெனவே தொடர் காயங்​கள் மற்​றும் தொடர்ச்​சி​யான போட்டி அட்​ட​வணை​யால் நெருக்​கடி​யில் இருக்​கும் நியூஸிலாந்து அணிக்கு, கான்​வேயின் வில​கல் பின்​னடைவை ஏற்​படுத்​தக்​கூடும். எனினும், அதே மோதலில் காயமடைந்த மற்​றொரு வீரரான மாட் ஹென்றி குணமடைந்​துள்​ளார். இன்​றைய போட்​டி​யில் அவர், களமிறங்​கக்கூடும்.

<div class="paragraphs"><p>இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.&nbsp;</p></div>
10, 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

X