

மிர்பூர்: வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது.
மிர்பூரில் நடைபெற்ற இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 272 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 245 ரன்களும் சேர்த்தன. 3-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்றைய 4-ம் ஆட்டத்தில் அந்த அணி 48.4 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 170 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 35.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.