“பங்கேற்று செல்ல வரவில்லை; போட்டியிட வந்துள்ளோம்” - நேபாள கேப்டன் ரோஹித் பவுடெல் | T20 WC 2026

நேபாள கேப்டன் ரோஹித் பவுடெல்

நேபாள கேப்டன் ரோஹித் பவுடெல்

Updated on
1 min read

மும்பை: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நேபாள அணி விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 ரன்களில் வெற்றியை நெருங்கி வந்து தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கு பிறகு நேபாள கேப்டன் ரோஹித் பவுடெல் கூறியதாவது:

“நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம். அதே நேரத்தில் நாங்கள் எங்கள் அணியை எண்ணி பெருமை கொள்கிறோம். இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறந்த ஆட்டத்திறனை எங்கள் அணி வீரர்கள் வெளிப்படுத்தினர். அது பாராட்டத்தக்கது. நாங்கள் களம் கண்ட போது எங்களுக்குள் சொல்லிக்கொண்டது ஒன்றே ஒன்றுதான். ஆட்டத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் 110 சதவீதம் ஒரு அணியாக இணைந்து செயல்பாட்டை வெளிப்படுத்த விரும்பினோம். அதை செய்தோம்.

அந்த நம்பிக்கையோடுதான் உலகக் கோப்பை தொடருக்கு வந்துள்ளோம். இங்கு வந்து பங்கேற்றுவிட்டு மட்டும் செல்ல விரும்பவில்லை. சிறந்த போட்டியாளராக இருக்க விரும்புகிறோம். அதனால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என நம்புகிறோம். அந்த நம்பிக்கையுடன் இந்த தொடரின் அடுத்தடுத்த ஆட்டங்களை விளையாடுவோம். இங்கிலாந்து உடனான ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இருப்பினும் எங்கள் ஆட்டத்தால் நேபாள மக்கள் பெருமிதம் கொள்வார்கள்” என்றார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப்-சி பிரிவில் உள்ளது நேபாள அணி. இதே பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் உள்ளன. வரும் 12-ம் தேதி இத்தாலி உடன் அடுத்த ஆட்டத்தில் நேபாள அணி விளையாடுகிறது.

<div class="paragraphs"><p>நேபாள கேப்டன் ரோஹித் பவுடெல்</p></div>
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்வு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 அதிகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in