ஃபிடே இடைக்கால தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் நியமனம்

விஸ்வநாதன் ஆனந்த்

விஸ்வநாதன் ஆனந்த்

Updated on
1 min read

புதுடெல்லி: சர்​வ​தேச சதுரங்​கக் கூட்​டமைப்​பின் (ஃபிடே) தலைவராக ரஷ்​யா​வின் அர்​காடி துவோர்​கோ​விச் இருந்து வந்தார்.

இந்​நிலை​யில், தொடர்ந்து நடை​பெற்று வரும் ரஷ்​யா-உக்​ரைன் போரின் காரண​மாக அர்​காடி துவோர்​கோ​விச் மீது ஐரோப்​பிய யூனியன் பொருளா​தா​ரத் தடையை விதித்​துள்​ளது.

ஐரோப்​பிய யூனியனின் இந்த நடவடிக்​கை​யால் அவரது வங்​கிக் கணக்​கு​கள் முடக்​கப்​பட​வும், பயணத் தடைகள் விதிக்​கப்​பட​வும் வாய்ப்​புள்​ளது. இதனால் அர்​காடி துவோர்​கோ​விச் ஃபிடே தலை​வர் பதவியி​லிருந்து தற்​காலிக​மாக வில​கி​யுள்​ளார்.

இதையடுத்து ஃபிடே அமைப்​பின் துணைத் தலை​வ​ராக செயல்​பட்டு வந்த ஐந்து முறை உலகச் சாம்​பிய​னான இந்​தி​யா​வின் விஸ்​வ​நாதன் ஆனந்த், விதி​முறை​களின்​படி தற்​போது இடைக்​காலத் தலை​வ​ராகப் பொறுப்​பேற்​றுள்​ளார். விஸ்​வ​நாதன் ஆனந்த் 2022-ம் ஆண்டு முதல் ஃபிடே அமைப்​பின்​ துணைத்​ தலை​வ​ராகப்​ பணியாற்​றி வரு​கிறார்​.

<div class="paragraphs"><p>விஸ்வநாதன் ஆனந்த்</p></div>
ஆஷஸ் டெஸ்ட் தொடரை இந்தியாவில் நடத்த திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in